31/10/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
31/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *505*
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

 பேனாமுள் Karthick
✍️  *அக்-31*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25877.85*
*பேங்க் நிப்டி : 58031.10*
*சென்செக்ஸ் : 84404.46*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12143*
*22 Kதங்கம்/ g. : ₹ 11135*
 *வெள்ளி    /g   : ₹ 165.00*

 பேனாமுள் Karthick
✍️ *சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு*

சுபமுகூர்த்த தினமான இன்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்*

சென்னையில் வரும் நவம்பர் 24ம் தேதி முதல் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 பேனாமுள் Karthick
✍️ *பசும்பொன்னில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம் அமைக்கப்படும் : முதல்வர்*

பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலை கோயிலில் நவ.4ம் தேதி நடை அடைப்பு*

பௌர்ணமி, அன்னாபிஷேகம் நடைபெறுவதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் நவ.4ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் திரையுடன், 8 இடங்களில் ஏஐ கேமரா*

கோவை: புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க திரையுடன், 8 இடங்களில் ஏஐ கேமரா பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 பேனாமுள் Karthick
✍️ *தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்*

முண்டியம்பாக்கம் ரயில்வே பணிமனையில் வரும் 1, 2ம் தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *மணமகள் மர்ம மரணம்*

பள்ளிப்பட்டு: இன்று காலை திருமணம் நடக்க விருந்த மணமகள் குளியறையில் மர்மமான முறையில் இறந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ரேஷன் பெண் ஊழியர் படுகாயம்*

வண்ணாரப்பேட்டை: ரேஷன் கடையின் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்ததில், பெண் ஊழியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

 பேனாமுள் Karthick
✍️ *வழக்கறிஞர்கள் மறியல்*

பிராட்வே: வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரிமுனை பகுதியில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக 5 பேருக்கு பதவி உயர்வு*

தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்*

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 24ம் தேதி தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்கிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *இந்தியாவிலேயேமுதல் மாநிலம் வறுமை இல்லா மாநிலமாகிறது கேரளா*

கேரள மாநிலம் உருவான நாளான நாளை (1ம் தேதி) திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்.17ல் தொடக்கம்*

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடக்கிறது. 12ம் வகுப்பு தேர்வுகள் 2026, பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி நிறைவடைகிறது. முழு தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *தொழிலாளியிடம் ரூ.2.76 கோடி வரி கேட்டு ஜிஎஸ்டி அலுவலகம் நோட்டீஸ்*

ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் கூலி தொழிலாளிக்கு ரூ 2.76 கோடி வரி மோசடியில் ஈடுபட்டதாக கூறி நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 பேனாமுள் Karthick
✍️ *2-வது டி20: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்*

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் மாடுகள் சிறைபிடிப்பு*

நேற்று அதிகாலை ஆவடி,பட்டாபிராம் மற்றும் தண்டுரை பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை பிடித்து காஞ்சிபுரத்தில் உள்ள கோ சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையம் செல்ல வேண்டாம்*

 பாஸ்போர்ட், பள்ளி,கல்லூரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால் eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். 
இந்த ஆவணங்கள் பெற பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம்.

 பேனாமுள் Karthick
✍️ *நவம்பர் 3,4 ஆம் தேதிகளில் வீடுகளுக்கு ரேஷன் பொருள் விநியோகம்* 

 தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டு தாரர்களுக்கு அடுத்த மாதம்  3,4 ஆம் தேதிகளில் அவரவர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொள்ளுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்*

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக அக்.22ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments