தேதி
9/10/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *485*
*காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர்*
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
பேனாமுள் Karthick
✍️ *அக்-09*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25046.15*
*பேங்க் நிப்டி : 56018.25*
*சென்செக்ஸ் : 81773.66*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12389*
*22 Kதங்கம்/ g. : ₹ 11360*
*வெள்ளி /g : ₹ 170.00*
பேனாமுள் Karthick
✍️ *மாற்றுத் திறனாளிகளுக்கு இனி ஒரே அடையாள அட்டை*
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது; மருத்துவ பரிசோதனை செய்து, நேரடியாக மத்திய அரசின் யு.டி.ஐ.டி. கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமம் ரத்தாகிறது*
மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான கோல்ட்ரிப் மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமம் வரும் 13ம் தேதி ரத்து செய்யப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தெருக்களின் ஜாதி பெயர்கள் மாற்றம் காலனி என்ற பெயர் இருக்காது*
காலனி என்ற சொல்
அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன் சாலைகள் தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நடிகர்கள் வீடுகளில் ஈ.டி. ரெய்டு*
அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான் பிரித்விராஜ் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பேனாமுள் Karthick
✍️ *அக். 12 வரை ராமதாஸ் ஓய்வு*
இதய மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வரும் 12ம் தேதி ஓய்வு எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஊராட்சிகளில் மக்களின் முக்கியமான 3 தேவைகளை நிறைவேற்ற அரசு உத்தரவு*
ஊராட்சிகளில் வரும் 11ம் தேதி நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில் மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றக்கூடிய மூன்று தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *விஜய்க்கு சி.ஆர்.பி.எப்., ஆய்வு*
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்ததில் சி.ஆர்.பி.எப். எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த எட்டு பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *சீமான் - விஜயலட்சுமி வழக்கு முடித்து வைப்பு*
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையிலான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை பல்கலை மெரினா வளாகம் கிண்டிக்கு இடம் மாறுகிறது*
சென்னை பல்கலையின் மெரினா வளாகத்தில் இயங்கும் துறைகள் கிண்டி வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொங்கலுக்கு முன் திறக்க அழுத்தம்*
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொங்கலுக்கு முன் திறக்க தமிழக அரசு சார்பில் தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *கழிவுநீர் தொட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல்*
கொடுங்கையூர் கழிவு நீர் தொட்டியில் ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கொடுங்கையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ரயில்களின் சேவையில் மாற்றம்*
திருப்பதி ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடப்பதால் சென்ட்ரல் அரக்கோணம் - திருப்பதி ரயில்கள் வரும் நவ.5 வரை திருச்சானுார் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மின்குறை தீர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு*
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள மின்குறை தீர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக அக்டோபர் 10ம் தேதி (நாளை) வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள் அறிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் www.tnerc.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *4வது பல்லுயிர் பாரம்பரிய தளமானது நாகமலை குன்று*
ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் 4வது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நவம்பர் 7ம் தேதிக்குள் நெட் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்*
2ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக நவம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உள்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்திலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் இன்று திறப்பு*
முதல்வர் இன்று காலை மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்*
வருவாய் கோட்டங்களான பொன்னேரி திருவள்ளூர் திருத்தணி ஆகிய அலுவலகங்களில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *பட்டாபிராமில் மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு கமிஷ்னர் பங்கேற்றார்*
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்கள் தலைமையில் பள்ளி வளாகங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பேனாமுள் Karthick
✍️ *மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டி அமைச்சர் நாசர் பங்கேற்றார்*
மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆவடியில் உள்ள நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் கேடயங்களை அமைச்சர் நாசர் வழங்கினார்.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணனூர் குளத்தில் மிதந்த வாலிபர் உடல்*
அண்ணனூரில் கங்கை அம்மன் கோவில் குளத்தில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது வெகு நேரம் ஆகியும் வெளியே வராமல் மாயமானார். இதை அடுத்து அயப்பாக்கம் போலீசார் ஆவடி தீயணைப்பு துறை உதவியுடன் இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை இந்த நிலையில் நேற்று மதியம் குளத்தின் கரையில் அவரது உடல் மிதந்தது போலீசார் இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *அழகு நிலைய சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு*
அரும்பாக்கம் அழகு நிலையத்தின் அலட்சியமான செயலால் மனுதாரர் பல்வேறு துயர்ங்களை அனுபவித்துள்ளதாக கூறி மனுதாரருக்கு அழகு நிலையம் தரப்பில் இழப்பீடாக ரூபாய் 5 லட்சமும் வழக்கு செலவுக்காக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவொற்றியூரில் 852 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி*
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் தியாகராஜ சாமி வடிவுடையம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இலவச கட்டாய கல்வி சட்ட ஒதுக்கீடு சான்று தர இன்று கடைசி நாள்*
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயன்பெற எல்கேஜி சேர்ந்துள்ள மாணவர்களின் பெற்றோர்கள் உரிய சான்றிதழ்களை பள்ளிகளில் இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ரேஷன் பொருட்களை விட்டுக் கொடுக்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் : திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்*
ரேஷன் பொருள் வாங்க விருப்பமில்லாதவர்கள் அதை இணையதளத்தில் பதிவு செய்து விட்டுக் கொடுக்கலாம் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தீவுதிடலில் 11ஆம் தேதி 30 பட்டாசு கடைகள் திறக்க ஏற்பாடு*
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான தீவுத்திடலில் பட்டாசு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளில் விற்பனையை 11ஆம் தேதி காலை 8 மணிக்கு அமைச்சர் பி.கே சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காடு அருகே ஒப்பந்ததாரரை மிரட்டி ரூ 10லட்சம் பறிப்பு*
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடமிருந்து திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டி ரூ. 19 லட்சத்தை பறித்து சென்றுள்ளனர்.இதை
திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி