27/10/2025
✍️ *சென்னை,பாடி குமரன் நகர் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்*
பாடி குமரன் நகர் மகாத்மா காந்தி சாலையில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த இடத்தில் வாகனங்கள் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த அம்பத்தூர் மண்டல பணியாளர்கள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தற்காலிக மாக மண்ணைக் கொட்டி சாலையை சீர் செய்திருக்கிறார்கள் தொடர்ந்து இந்த இடத்தில் அடிக்கடி பள்ளம் விழுந்த வண்ணம் இருந்து வருகிறது என்றும் அதற்கு நிரந்தரமாக இந்தப் பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
செய்தி
*பேனாமுள் இதழ்*