சென்னை,முகப்பேர்,ஜெ ஜெ நகர் மின்வாரியத்திற்க்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மின்சாரம் தடை
பதிவு
26/10/2025

*சென்னை,முகப்பேர்,ஜெ ஜெ நகர் மின்வாரியத்திற்கு உட்பட்ட உயர் அதிகாரிகள் பார்வைக்கு*

சென்னை முகப்பேர் ஜெ ஜெ நகர் மின்வாரியத்திற்கு உட்பட்ட பாடி தேவர்நகர், காந்தி தெரு, திருவல்லீஸ்வரர் காலனி பகுதியில் கடந்த 4 நாட்களாக ஒரு நாளைக்கு பலமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டு வருகிறது இதனால் இந்த பகுதியில் உள்ள முதியவர்கள், குழந்தைகள்,பெண்கள் மிகவும் சிரமப்பட்டு, அவதிப்பட்டு வருகிறார்கள் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டித்து,துண்டித்து வருவதால் இந்த பகுதியில் பல அசம்பாவித செயல்களும் நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனைகளோடு தெரிவிக்கிறார்கள்.
Comments