தேதி
10/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *514*
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
பேனாமுள் Karthick
✍️ *நவ-10*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டு படிவத்தை இணையதளம் மூலம் நிரப்ப புதிய வசதி*
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://voters.eci.gov.in ல் கணக்கீட்டு படிவத்தை இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும் மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *நிலவில் நீர் இருப்பதற்கான புகைப்படத்தை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்*
நிலவில் உள்ள நீர் பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திர யான்-2 ஆர்பிட்டர் அனுப்பி இருக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்*
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *தெற்கு ரயில்வே அறிவிப்பு*
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி காரணமாக உழவன் ,அனந்தபுரி, சேது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது, நாளை முதல் வரும் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஆம்னி பேருந்துகள் இன்று முதல் ஓடாது: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு*
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பீஹாரின் 122 தொகுதிகளில் நாளை தேர்தல்*
பீஹாரிலுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை, இரண்டாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *புற்றுநோய் பரிசோதனைக்கு வாகன சேவை*
ஒவ்வொரு மாவட்டத்துக்கும், முழு உடல் பரிசோதனை வசதிகளுடன் கூடிய வாகனங்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *காவலர் பணி எழுத்து தேர்வு*
இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுகளில் 1,96161 பேர் பங்கேற்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *முட்டை சப்ளை செய்ய டெண்டர் வெளியீடு*
அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ - மாணவியருக்கு முட்டை வழங்குவதற்காக ஓராண்டுக்கு தேவையான 113.38 கோடி முட்டைகள் சப்ளை செய்ய தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அபார்ட்மென்ட்களில் வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்*
அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி ஏற்படுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் பொது கட்டட விதிகள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி*
தமிழகத்தில் 3 இடங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
வரும் 30ம் தேதி மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறைவடையும்.
பேனாமுள் Karthick
✍️ *இன்று உலக தடுப்பூசிகள் தினம்*
நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி உலக தடுப்பூசிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *பழங்கால கணித முறை சேர்ப்பு*
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள 7 ஆம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் பழங்கால இந்திய கணித முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இயற்கணிதம் என்ற அல்ஜிப்ரா பகுதி இந்தியர்களால் உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது
பேனாமுள் Karthick
✍️ *அம்பத்துார் தொழிற்பேட்டையில் தீ விபத்து*
அம்பத்துார் தொழிற்பேட்டை 8 வது தெரு பகுதியில் உள்ள இரும்பு பொருட்கள் தொழிற்சாலையில் சூடான இரும்பு பொருட்களை குளிரூட்டும் ஆயில் போடும்போது திடீரென ஆயில் தீப்பற்றி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *மகனை கொன்ற தந்தை*
அம்பத்துார் கல்யாணபுரத்தில் கஞ்சா போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கூவம் ஆற்றில் விழுந்தவர் உடல் மீட்பு*
திருவேற்காடு அடுத்த காடுவெட்டி தரைப்பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உடல் மீட்கப்பட்டது.
திருவேற்காடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *நாளை டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்*
பாதுகாப்புப் படைகள் பாதுகாப்பு சிவில் நிறுவனங்கள் மற்றும் மத்தியஅரசு துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைப் புதுப்பிப்பதற்கான முகாம் நாளை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறவுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள்*
சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.
இந்த சிறப்பு ரயிலானது H.S. நாந்தேட் கொல்லம் இடையே வருகின்ற 20, 27 மற்றும் டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1,8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வரவேண்டும்*
சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சரியான நேரத்திற்கு வர முயற்சிக்க வேண்டும் என்று கேரள போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன.
பேனாமுள் Karthick
✍️ *பெண்ணை சுற்றி வளைத்து தெரு நாய்கள் கடித்தது*
சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த விந்தியா என்பவர் சாலையில் நடந்து செல்லும் போது
5 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்துள்ளது.
இந்த சம்பவம் அங்குள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தபால் அலுவலக குறை தீர்வு முகாம்*
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11832 தபால் அலுவலகங்களில் வாடிக்கையாளர் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இருந்தால்
அஞ்சல் குறை தீர்ப்பு என்ற தலைப்புடன் உதவி இயக்குனர் முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம்,தமிழக வட்டம், சென்னை 60002 என்ற முகவரிக்கு வரும் 17ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் மேலும் DAKADALAT pg.tn@indiapost.gov.in என்ற e-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*