தேதி
11/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *515*
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
பேனாமுள் Karthick
✍️ *நவ-11*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25574.35*
*பேங்க் நிப்டி : 57937.55*
*சென்செக்ஸ் : 83535.35*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12378*
*22 Kதங்கம்/ g. : ₹ 11350*
*வெள்ளி /g : ₹ 167.00
பேனாமுள் Karthick
✍️ *டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து 13 பேர் பலி: பயங்கரவாத தாக்குதல்*
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து 13 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாத செயலா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் என்ஐஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
டெல்லி கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *இரண்டாம் கட்ட தேர்தல் பீகாரில் 122 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு*
பீகாரில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
பேனாமுள் Karthick
✍️ *பாக். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 டாக்டர்கள் உட்பட 8 பேர் அதிரடி கைது*
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவில் நாசவேலைகள் செய்ய தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது.
இதைத் தொடர்ந்து காஷ்மீர் உள்ளிட்ட எல்லை ஒட்டிய மாநிலங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டன.
தகவலின் அடிப்படையில், குல்காமின் வன்போரா பகுதியை சேர்ந்த டாக்டர் அதீல் உட்பட மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 15 நாட்களாக நடந்த இந்த ரகசிய ஆபரேஷன் மூலம் தீவிரவாத அமைப்புகளின் பயங்கர தாக்குதல் திட்டங்களையும் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான தி.மு.க. மனு இன்று விசாரணை*
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்*
தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தங்கசாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
பேனாமுள் Karthick
✍️ *தமிழகத்தில் 50 புதிய ஆதார் மையங்கள்*
தமிழகத்தில் புதிதாக 50 நிரந்தர ஆதார் சேவை மையங்கள் நேற்று துவக்கப்பட்டன.
ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை, 266ல் இருந்து 316ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *முதியோருக்காக அன்புச்சோலை மையங்கள்*
தமிழகம் முழுதும் முதியோரை பராமரித்து பாதுகாக்கும் வசதிகள் அடங்கிய 25 அன்புச்சோலை மையங்களை முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நேற்று துவக்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *மயான பூமி 15 நாட்கள் மூடல்*
திரு.வி.க.நகர் நேர்மை நகர் மயானபூமி பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, 15 நாட்கள் மயான பூமி இயங்காது.
பொதுமக்கள் அருகில் உள்ள தாங்கல், ஜி.கே.எம்., மயான பூமிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் மாடுகள் சிறைபிடிப்பு*
ஆவடி மாநகராட்சி பகுதிகளில், சாலையில் திரிந்த 18 மாடுகள் நேற்று சிறைபிடிக்கப்பட்டன.
காஞ்சிபுரத்தில் உள்ள மாடுகளை பராமரிக்கும் இடமான கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பேனாமுள் Karthick
✍️ *சேவை மையத்தில் ஒப்பந்த பணிபுரிய விண்ணப்பிக்கலாம்*
நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
https:chennai.nic.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வருகிற 21ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்யலாம்.
பேனாமுள் Karthick
✍️ *எம்.ஆர்.பி. விலையில் மது விற்க புதிய திட்டம்*
சென்னையில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்.ஆர்.பி விலை மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஸ்கேனர்களை பிஓஎஸ் இயந்திரங்களுடன் இணைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் தீவிர வாகன சோதனை*
சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் மேற்பார்வையில் பெருநகரம் முழுவதும் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள 105 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்*
ஜனவரி 10ம் தேதி (சனிக்கிழமை) பயணம் செய்பவர்களுக்கான முன்பதிவு இன்றும், ஜனவரி 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்பவர்களுக்கான முன்பதிவு வரும் 12ம் தேதியும் தொடங்குகிறது. தொடர்ந்து ஜனவரி 12ம் தேதி (திங்கட்கிழமை) பயணம் செய்ய வரும் 13ம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
மேலும் பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 13ம் தேதி பயணம் செய்வதற்காக வரும் 14ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *மாதவரம் மண்டலத்தில் 3 குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்*
சென்னை மாநகராட்சி
மாதவரம் மண்டலத்தில் உள்ள ராமச்சந்திரா குளம், படவேட்டம்மன் கோயில் குளம் மற்றும் ஊத்துகுளம் ஆகிய 3 நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளது.
இதற்காக மாநகராட்சி 1.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணாநகர் மதுவிலக்கு J J நகருக்கு மாற்றம்*
தற்போது அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் இருந்து அரும்பாக்கத்திற்கு தனியாக மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்த கலால் எனும் அண்ணாநகர் மதுவிலக்கு அலுவலகம்
J J நகர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சவுகார்பேட்டையில் அகர்வால் கண் மருத்துவமனை*
அகர்வால் கண் மருத்துவமனை சவுகார்பேட்டை மின்ட் சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. சவுகார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் மருத்துவமனையை நேற்று திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் 15 ஆம் தேதி முதல் துவக்கம்*
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 31373 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ஆண்டுக்கு 64.73 கோடி அரசு செலவிடுகிறது. உணவு வழங்கும் திட்டம் வரும் 15 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நபார்டு வங்கியில் பணியிடங்கள்*
91A கிரேடு உதவி மேலாளர் பணியிடங்கள், முதல் நிலை, முதன்மை சைக்கோ மெட்ரிக் ஆகிய 3 கட்டத் தேர்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன . முதல் நிலை தேர்வுகள் டிசம்பர் 20 ல் துவங்கும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்குள்
www.nabard.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை ஐஐடியில் இலவச பயிற்சி*
CNC வாயிலாக துல்லியமாக கூறுகளை வடிவமைத்தல் மற்றும் இயந்திரங்களை இயக்குதல் தொடர்பான பயிற்சிகள் சென்னை ஐஐடியில் 10 நாட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. BE மெக்கானிக்கல், BE உலோகம் மற்றும் இயந்திர உற்பத்தி படித்தோர் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/courese
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சைகை மொழி வீடியோக்கள்*
அரசு பள்ளியில் படிக்கும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு கல்வி கற்பிப்பதற்காக அரை மணி நேரம் சைகை மொழி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை கல்வி தொலைக்காட்சியில் காலை 11 மணி மற்றும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பபடுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *சைதாப்பேட்டையில் சலவை கூடம் நூலகம் திறப்பு*
சைதாப்பேட்டையில் 7.47 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சலவை கூடம் மற்றும் நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மருத்துவம் சார்ந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்*
சென்னை மருத்துவக் கல்லூரியில் ஸ்டான்லி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூர் உட்பட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 1149 இடங்கள் காலியாக உள்ளன.
ஓராண்டு மருத்துவ படிப்பில் சேர இம்மாதம் 14 ஆம் தேதிக்குள் கல்லூரி துணை முதல்வர்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *குரூப் 2 முதன்மைத் தேர்வு நாளை முதல் பயிற்சி*
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2a முதன்மை தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் துவக்கப்பட உள்ளது.
விபரங்களுக்கு 8489866698 9626456509 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *கறி சூடாக இல்லை என தகராறு*
கோயம்பேடு சந்தை பி சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிட்ட தினேஷ் என்பவர் கறி சூடாக இல்லை என கூறியதால் தள்ளுவண்டி கடை நடத்திய சங்கர் என்பவருக்கும் தினேஷ்க்கும் ஏற்பட்ட தகராறில் தினேஷ் தலையில் 20 தையல் போடப்பட்டது.
இரு தரப்பினர் அளித்த புகார் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு*
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கற்பகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இதற்கு முன் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் பட்டாசு வெடித்ததில் தகராறு*
குழந்தைகள் பட்டாசு வெடித்ததில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த அலோசியஸ் மற்றும் சதீஷ் இடையே தகராறு ஏற்பட்டதில் அலோசியஸ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஆவடி போலீசார் சதீஷ்ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் நாட்டு வெடி அழிப்பு*
பட்டாபிராமில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ நாட்டு வெடியை நீதிமன்ற உத்தரவு படி போலீசார் நேற்று அளித்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செல்போன்களை ஆட்சியர் வழங்கினார்*
காது கேளாதோர் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் 15 பேருக்கு விலையில்லா செல்போன்களை ஆட்சியர் மு. பிரதாப் நேற்று வழங்கினார்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா*
திருவள்ளூர் மாவட்டத்தில் 72 வது கூட்டுறவு வார விழா நவம்பர் 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக உதவி மையம் திறப்பு*
கும்மிடிப்பூண்டி 7200133851
பொன்னேரி 91507 99790 திருத்தணி 8610645913 திருவள்ளூர் 94459 00494 பூந்தமல்லி 97892 54821 ஆவடி 8925902432 மதுரவாயல் 94451 90091 அம்பத்தூர் 94451 90207
மாதவரம் 9003595898
பேனாமுள் Karthick
✍️ *ஆன்லைன் வசதி அறிமுகம்*
நில உபயோக மாற்றம் கட்டடப்பணி நிறைவு சான்று ஆகியவற்றுக்கான பணிகள் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
http://onlineppa.tn.gov.in/
swp-web/login என்ற இணையத்தளம் அதிகாரப்பூர்வமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*