14/11/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
14/11/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *518*
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

 பேனாமுள் Karthick
✍️  *நவ-14*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25879.15*
*பேங்க் நிப்டி : 58381.95*
*சென்செக்ஸ் : 84478.67*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12858*
*22 Kதங்கம்/ g. : ₹ 11790*
 *வெள்ளி    /g   : ₹ 183.00*

 பேனாமுள் Karthick
✍️ *வங்கக்கடலில் 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது*

21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு*

தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் 55 சதவீதத்தில் இருந்து 58 சவீதமாக உயர்ந்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *இயக்குநர் சுந்தர்.சி அறிவிப்பு*

தவிர்க்க முடியாத காரணத்தால் கமல் தயாரித்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்க முடியவில்லை என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *ஜவஹர்லால் நேரு 137ஆவது பிறந்த நாள்*

ஜவர்ஹலால் நேரு 137ஆவது பிறந்த நாளான 14.11.2025 இன்று காலை 09.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் சென்னை, கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

 பேனாமுள் Karthick
✍️ *பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை*

46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *தமிழகம் முழுவதும் தவெக சார்பில் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்*

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து தவெக சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

 பேனாமுள் Karthick
✍️ *இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்*

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *ஆலோசனை கூட்டம் பன்னீர்செல்வம் அறிவிப்பு*

ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 பேனாமுள் Karthick
✍️ *கடலம்மா மாநாடு: சீமான்*

தண்ணீர் மாநாடு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கடலம்மா மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலம்மா மாநாடு திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் நவ.21ம் தேதி நடக்க உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *நடமாடும் மருத்துவ வாகனம் முதல்வர் துவக்கி வைத்தார்*

புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் நல்வாழ்விற்காக டிஜிட்டல் மேம்மோகிராபி இ.சி.ஜி.கருவி செமி ஆட்டோ அனலைசர் உட்பட பல்வேறு வசதிகளுடன் நடமாடும் மருத்துவ வாகனம் 1.10 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் முதல் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நேற்று தலைமைச் செயலகத்தில் அந்த வாகனத்தில் உள்ள வசதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு அந்த வாகனத்தை துவக்கி வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணி*

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, இன்று முதல் டிச., 4 வரை, https://www.cbse.gov.in/, httips://kvsangathan.nic.in/, https://navodaya.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *உலக கிக் பாக்சிங் போட்டி*

அபுதாபியில் நடக்க உள்ள உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து, 11 வீரர் - வீராங்கனையர் தகுதி பெற்றுள்ளனர்.

இம்மாதம் 21ல் துவங்கி 30ம் தேதி வரை உலக கிக் பாக்சிங் போட்டி நடக்கவுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *சிறுவர்களுக்கு சதுரங்க போட்டி*

சிறுவர்களுக்கான மாநில சதுரங்க போட்டி, சேலையூரில் உள்ள குகன்ஸ் பள்ளியில் 16ம் தேதி நடக்க உள்ளது. 
8, 10, 13, 25 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் தனித்தனியாக பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் இன்று மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு 72001 01544 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ராமதாஸ் அறிவிப்பு*

திண்டிவனத்தில் வரும் 18ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடக்கிறது.

பேனாமுள் Karthick
✍️ *கலைஞர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்களுக்கு உதவ வேண்டும்:முதல்வர்*

உடன்பிறப்போ வா நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் தகுதியானவர்கள் இருப்பின் கலைஞர் உரிமை தொகை பெற கட்சியினர் உதவிட வேண்டும் என்றும் அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

பேனாமுள் Karthick
✍️ *ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை தொடக்கம்*

தமிழகத்தில் நவ., 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வை எழுத 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது*

இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *மாநகராட்சி பணி நிரந்தரம் செய்துள்ளது*

 14 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த 226 பேரை சென்னை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி* 

 வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி உதவி பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

 www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் முன்னாள் படை வீரருக்கு எலக்ட்ரீசியன் பயிற்சி* 

 திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் மறு வேலை வாய்ப்பு பெற எலக்ட்ரீசியன் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விரும்புவோர் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் கீழ்த்தரத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04429595311 என்று தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
exweltlr@tn.gov.in  என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆன்லைனில் யார் பதிவு செய்யலாம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்*

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கணக்கீட்டு படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலிலும் ஆதார் அட்டையிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2002, 2005ம் ஆண்டு நடந்த தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்கள் விபரங்களை, https://www.voters.eci.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில் Search your name in the last sir என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதில் தமிழகம் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் பெயர் மூலம் தேடுதல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் வழியே தேடுதல் என்பதன் அடிப்படையில் தங்கள் விபரங்களை மீட்டெடுக்கலாம்.

பெயர் பயன்படுத்தி தேடும்போது மாவட்டம் சட்டசபை தொகுதி வாக்காளர் பெயர், தந்தை, தாய், கணவர், சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரி பார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்கள் விபரங்களைப் பெறலாம்.

*ஆன்லைனில் பூர்த்தி செய்ய*

வாக்காளர் தங்கள் மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் வழியே உள்நுழைய வேண்டும். அப்போது மொபைல் எண்ணுக்கு வரும் ஒரு முறை ஓ.டி.பி., எண்ணை உள்ளிட வேண்டும்.

உள்நுழைந்த பின் அந்த பக்கத்தில் காட்டப்படும் Fill Enumeration Form என்ற இணைப்பை தேர்வு செய்யலாம். இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

வெற்றிகரமாக உள் நுழைந்த பின் அதில் கோரப்படும் விபரங்களை நிரப்ப வேண்டும். சரியான விபரங்களை சமர்ப்பித்த பின் இணைய பக்கம் e-sign பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.எண்ணை பதிவு செய்ததும் படிவம் வெற்றிகரமக பதிவேற்றப்படும்.

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments