15/11/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
15/11/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *519*
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.

மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்

 பேனாமுள் Karthick
✍️  *நவ-15*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50
 
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25910.05*
*பேங்க் நிப்டி : 58517.55*
*சென்செக்ஸ் : 84562.78*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12700*
*22 Kதங்கம்/ g. : ₹ 11645*
 *வெள்ளி    /g   : ₹ 180.00*

 பேனாமுள் Karthick
✍️ *பீகாரில் ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணி*

தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள்  சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.

 பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் படைப்பகம் திறப்பு*

கொளத்துார் தொகுதியில் அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் பயனடைய கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *ஓதுவார் பயிற்சி பள்ளி துவக்கம்*

அறநிலையத்துறை சார்பில் வடபழனி முருகன் கோவிலில் நேற்று ஓதுவார் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *பள்ளிப் பார்வை-2.0’ செயலி அறிமுகம்*

தமிழகத்தில் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிப் பார்வை எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதை மேம்படுத்தி புதிய பள்ளிப் பார்வை-2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை அலுவலர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு இன்று தொடக்கம்*

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த தேர்வுகளில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *சபரிமலையில் நடை நாளை திறப்பு*

சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நாளை மறுதினம்(17ம் தேதி முதல்) தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது*

மயிலாப்பூர் பஜார் சாலையில் மோகன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.அவர் கடைக்கு வந்த வாடிக்கையாளரை தெருநாய் ஒன்று கடிக்க வந்துள்ளது. பிறகு நாயை விரட்ட முயன்ற மோகனையும் நாய் கடிக்க வந்ததால் ஆத்திரமடைந்த மோகன் கடையில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து நாயை கடுமையாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்தது.

அதைதொடர்ந்து, டீக்கடை உரிமையாளர் மீது 325 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகனை போலீசார் கைது செய்தனர்.

 பேனாமுள் Karthick
✍️ *5 மாவட்டங்களில் நாளை கனமழை*

தமிழகத்தில் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *த வெ க நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை* 

 புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஒரு லட்சம்
 த வெ க நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நேற்று தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது.

 பேனாமுள் Karthick
✍️ *டீக்கடை உரிமையாளர்கள் சங்க பேரவை கூட்டம்* 

 சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் பொது பேரவை கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்கா அருகில் கேரளா சமாஜம் அரங்கில் நடைபெற உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம்*

 மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் என தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *ரேஷன் கார்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ்*

 ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, மற்றும் நீக்கம் போன்ற சேவைக்கு ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற உத்தரவை உணவு வழங்கல் துறை வாபஸ் பெற்றுள்ளது.

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்-பேனாமுள் இதழ்
Comments