18/11/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
18/11/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *522*
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

 பேனாமுள் Karthick
✍️  *நவ-18*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26013.45*
*பேங்க் நிப்டி : 58962.70*
*சென்செக்ஸ் : 84950.95*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12536*
*22 Kதங்கம்/ g. : ₹ 11495*
 *வெள்ளி    /g   : ₹ 173.00*

 பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும்*

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் (Electors Help Desk) 18.11.2025 இன்று முதல் 25.11.2025 வரை செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *பொல்லான் நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்*

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவரங்கத்தை நவ.26ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 பேனாமுள் Karthic
✍️ *அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் திறப்பு*

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாள்*

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு நாளான 18.11.2025 இன்று காலை 9.30 மணியளவில் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் தகவல் மையங்கள்*

சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும் மாநில எல்லையான களியக்காவிளையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் களியக்காவிளை தகவல் மையத்தினை 94880 73779, 94862 70443, 94428 72911 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலை தீபத்திருவிழா*

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மகா தீபம் டிசம்பர் 3ம் தேதி மாலை ஏற்றப்படும். அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *டிசம்பர் 6ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம்*

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் டிசம்பர் 6ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிச.8ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *பிரதமர் வருகை: கோவையில் நாளை வரை டிரோன்கள் பறக்க தடை*

கோவையில் நாளை புதன்கிழமை நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் நாளை 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *காமன்வெல்த் செஸ் போட்டி*

காமன்வெல்த் செஸ் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அஸ்வினிகா
வெண்கலப்பதக்கத்தை
வென்றார்.

சென்னை கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாரின் மகளான அஸ்வினிகா நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *எஸ்ஐஆர் பணி இன்று முதல் புறக்கணிப்பு*

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை இன்று முதல் முழுவதுமாக புறக்கணிக்கப்போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் திடீரென அறிவித்துள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *எஸ்.ஐ.ஆர். பணிகளை இன்று புறக்கணித்தால் ஊதியம் கிடையாது*

எஸ்.ஐ.ஆர். பணிகளை இன்று புறக்கணித்தால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *கபீர் புரஸ்கார் விருது’பெற விண்ணப்பிக்கலாம்*

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது.

https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *நவோதயா பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்*

kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in வலைதளங்கள் மூலமாக டிசம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும்*

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை 57 ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தீர்ப்பாயத்திற்கு புதிய கட்டிடம்*

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு சென்னை அண்ணா நகரில் ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *49 புறநகர் மின்சார ரயில் ரத்து*

 பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவம்பர் 23ஆம் தேதி சென்னையில் 49 புறநகர் மின்சார ரயில் நிறுத்தி செய்யப்பட உள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *புதிய கட்சியின் பெயர் : மல்லை சத்யா*

 புதிய கட்சியின் பெயர் நவம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *விளையாட்டு நகரம் அமைக்க அரசு அனுமதி*

 சென்னை அருகே செம்மஞ்சேரியில் 112 ஏக்கரில் ரூ. 301 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள்* 

 49வது ஜூனியர் வாலிபால் சாம்பியன் ஷிப் போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 16-ல் துவங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இதில் பங்கேற்க விரும்புவோர் என்ற tnsva.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *சென்னை ஒன் செயலில் பயண அட்டை சேர்ப்பு* 

 சென்னை ஒன் செயலியில் 
தினசரி டிக்கெட் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் எம்டிசி யின் மாதாந்திர 1000, 2000 ரூபாய் பயண அட்டைகளை பயன்படுத்தும் வசதி தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மக்கள் குறை தீர் கூட்டம்*

 திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 444 கோரிக்கை மனுக்கள்  பெறப்பட்டன.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் 3 நாள் சிறப்பு முகாம்*

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வசதியாக ஓட்டுச்சாவடி மையங்களில்  இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை 3 நாட்கள் மாலை 3 மணி முதல் 6 மணி வரை உதவி மையம் செயல்பட உள்ளது.

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்-பேனாமுள் இதழ்
Comments