19/11/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
19/11/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *523*
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, 
 குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

 பேனாமுள் Karthick
✍️  *நவ-19*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25910.05*
*பேங்க் நிப்டி : 58899.25*
*சென்செக்ஸ் : 84673.02*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12361*
*22 Kதங்கம்/ g. : ₹ 11335*
 *வெள்ளி    /g   : ₹ 170.00*

 பேனாமுள் Karthick
✍️ *தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு - சுகாதாரத்துறை*

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாய்க்கடியால் நடப்பு ஆண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி; பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்*

கோவை மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பி.எம்.கிசான் திட்டத்தின் தவணைத்தொகையை விடுவிக்கிறார்.

21வது தவணைத்தொகையாக மொத்தம் ரூ. 18 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *S.I.R. படிவம் 94.74% விநியோகம்; பெறப்பட்டது 13.02%*

தமிழ்நாட்டில் 94.74% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 13.02% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.07 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 83.45 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *திருமலை நாயக்கர் அரண்மனை: இலவசமாக பார்வையிட அனுமதி*

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர் 19 முதல் 25 வரை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொதுப் போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு*

சென்னை பெருநகரத்திற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொதுப் போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA)வெளியிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலை தீபத் திருவிழா*

தீப விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

முக்கிய துறைகள் - 20
துறை பணிகள் ஒருங்கிணைப்பு குழுக்கள் 21
24 தற்காலிக பேருந்து நிலையங்கள்
130 கார் நிறுத்துமிடங்கள்

அனைத்து இலவச தற்காலிக பேருந்து/ கார் நிலையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், விளக்குகள், மேற்கூரைகள், PAS, காவல் மையம், தற்காலிக மின் இணைப்பு / Generator, வழிகாட்டு பலகைகள், தீ தடுப்பான்கள், அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *வாக்குச்சாவடி அதிகாரிகள் ஊதியம் இரட்டிப்பானது*

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஆண்டு ஊதியம் இரட்டிப்பாக அதிகரிப்பதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்*

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேர்வதற்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு வரும் 25ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரும்புவோர் விண்ணப்ப படிவம் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொன்னேரியில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு 044-27972457 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *சிமேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்*

விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 24ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cmat.nta.nic.in/ எனும் வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *SIR ஐ கண்டித்து நவம்பர் 24 விசிக ஆர்ப்பாட்டம்* 

  SIR  பணிகளை கண்டித்து வரும் நவம்பர் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *தனியார் துறை  வேலை வாய்ப்பு முகாம்* 

 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
 விருப்பமுள்ளோர் 
www.tnprivatejobs.tn.gov.in
என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *கழிவு மேம்படுத்தல் தொழில் முறை சான்றிதழ் படிப்பு*

 சென்னை பல்கலை கழகத்தின் விலங்கியல் துறை சார்பில் கழிவு மேம்படுத்தல் தொழில் முறை சான்றிதழ் படிப்புகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பங்களை 
www.unom.ac.in
என்ற இணையதளத்தில் பெறலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *BSNL விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம்* 

 BSNL சிம் கார்டு விற்பனை, ரீசார்ஜ்கள்,  போஸ்ட் பெய்டு சேவைகள் செய்வதற்கு விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளோர் 
https://etenders.gov.in 
என்ற இணையதளம் மூலம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *முயல் வளர்ப்பு பயிற்சி*

 செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 26 ஆம் தேதி விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் விரும்புவோர் 99405 42371 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *காடை வளர்ப்பு பயிற்சி*

 காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையத்தில் காடை வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நாளை நடைபெற உள்ளது.

 இந்த பயிற்சி முகாமில் படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம்.

  விரும்புவோர் 9790753594 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *ஃப்ரீகாஸ்ட் சுரங்கப்பாதையில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி*

 தாம்பரம் இரும்புலியூர்  ஃப்ரீகாஸ்ட் சுரங்கப்பாதை பணி முடிந்ததை அடுத்து இன்று முதல் அதன் வழியாக வாகனங்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *UPI வாயிலாக தனியார் வங்கிகள் விரைவில் கடன் வழங்கும் சேவை*

 ஆக்சிஸ் வங்கி எச்டிஎப்சி வங்கி மற்றும் கோடக் மகேந்திரா வங்கி ஆகிய தனியார் துறை வங்கிகள் UPI வாயிலாக கடன் வழங்கும் சேவையை விரைவில் துவங்கப்பட உள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *விரைவில் இ பாஸ்போர்ட்* 

 தனி பயனாளர் குறித்த விபரங்கள் அடங்கிய சிப் பதிக்கப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *பாரத் டாக்ஸி செயலி*

 நாடு முழுவதும் ஒரே செயலியில் பதிவு செய்து ஆட்டோ மற்றும் கால் டாக்ஸியில் பயணிக்க பாரத் டாக்ஸி செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *அஸ்மிதா லீக் தடகளம் போட்டி சென்னையில் இன்று துவக்கம்* 

 மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய தடகளச் சங்கம் மற்றும் சென்னை தடகள சங்கம் இணைந்து   பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் அஷ்மிதா லீக் தடகள போட்டிகள் இன்று தொடங்குகிறது.

பேனாமுள் Karthick
✍️ *சத்திய சாய் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள்*

 சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் சத்திய சாயிபி நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 கோவை திருப்பூர் ஈரோடு சேலம் வழியாக இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
 இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *சோழிங்கநல்லூரில் மெட்ரோ நிலையம்* 

 சோழிங்கநல்லூரில் 400 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் வணிக வளாகம் அமைக்கும் பணிகள் நடக்கின்றது.
 இப்பணிகள் 2027 ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


 பேனாமுள் Karthick
✍️ *கண்ணொளி காப்போம் திட்டத்தில் மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள்*

 சென்னை செனாய் நகர் ஃபுல்லா அவன்யூ பகுதியில் சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கண்ணொளி காப்போம் திட்ட முகாமில் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 187 மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை நேற்று மேயர் ஆர். பிரியா வழங்கினார்.

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments