தேதி
16/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *520*
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
✍️ *நவ-16*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12503*
*22 Kதங்கம்/ g. : ₹ 11465*
*வெள்ளி /g : ₹ 175.00*
பேனாமுள் Karthic
✍️ *தள்ளுவண்டிக் கடைகளுக்கு FSSAI சான்றிதழ் கட்டாயம்*
தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவு பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI உரிமம் பெறுவது கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் இலவசமாக சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல்*
2026 பிப்.22ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[11/16, 7:16 AM] பேனாமுள் Karthick(1): ✍️ *4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு*
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும்.
பேனாமுள் Karthick
✍️ *ஜெருசலேம் புனித பயணம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்*
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரமும் இ.சி.எஸ். முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 1-ந்தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வரை அனுப்பி வைக்கவேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *தமிழகம் முழுவதும் தவெக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்*
சென்னையில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று பேசுகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *3வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்*
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராவல்பிண்டியிலுள்ள மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போட்டி துவங்குகிறது.
பேனாமுள் Karthick
✍️ *முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்*
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
பேனாமுள் Karthick
✍️ *சபரிமலை பக்தர்களுக்கு அறிவுறுத்தல்*
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில் சபரிமலை வரும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அம்மாநில சுகாதாரத்துறை வழங்கிஉள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இன்ப அதிர்ச்சி தந்த அரசு*
சென்னையில் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து தொடர்ந்து 1,000 பேருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *வண்ணாரப்பேட்டையில் வணிகர்கள் திடீர் மோதல்*
கடை வணிகர்கள் சாலையோர வியாபாரிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் வண்ணாரப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து*
தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி திணறிய 4 பேரை அப்பகுதியில் மருந்து பொருட்கள் டெலிவரி செய்ய வந்த பாடியைச் சேர்ந்த விமல் 30 என்கிற வாலிபர் துணிச்சலாக மீட்டார்.
பேனாமுள் Karthick
✍️ *அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்*
சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் தி.மு.க.,வினர் முறைகேடு செய்கின்றனர். இதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நாளை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை புத்தகக்காட்சி இன்று நிறைவு*
ஒருவாரம் காலம் நடந்து வந்த சென்னை முற்போக்கு புத்தக்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *சிமேட் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்*
விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (நவம்பர் 17) நிறைவு பெறுகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cmat.nta.nic.in/ எனும் வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த நாளை மறுநாள் (நவம்பர் 18) கடைசி நாளாகும்.
தேர்வுக்கான பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் .
பேனாமுள் Karthic
✍️ *மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 22ம் தேதி ஓவியப்போட்டி*
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22ம் தேதி (சனிக்கிழமை) சி.எஸ்.ஐ. காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளி, சாந்தோமில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைப்பெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வளர்ப்பு நாய்கள் 2 ஆம் கட்ட முகாம் இன்று துவக்கம்*
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச பதிவு மற்றும் தடுப்பூசி முகாம் 2 வது முறையாக இன்று நடக்க உள்ளது. புளியந்தோப்பு, திருவிக நகர், தி.நகர் உள்ளிட்ட 6 மாநகராட்சி செல்லப்பிராணி மருத்துவமனைகளில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச பதிவு மற்றும் தடுப்பு ஊசி முகாம் இன்று நடத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
பேனாமுள் Karthick
✍️ *இலவச கண் பரிசோதனை*
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் 30ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை செய்யப்படுகிறது.
இலவச கண் பரிசோதனைக்கு 9594924048 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *இன்ஜினியர் மாணவர்கள் குறுகிய கால படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்*
இன்ஜினியரிங் மாணவ மாணவியருக்கு இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் துவங்க உள்ளன.
விருப்பமுள்ள மாணவ மாணவியர் https://swayam.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பேனாமுள் Karthick
✍️ *SBI வங்கி அறிவிப்பு*
மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் எம்கேஸ் பரிவர்த்தனை சேவை நவம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று முதல் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்கள்*
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் இன்று முதல் தொடங்கி டிசம்பர் 31 வரையில் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் : அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்*
ஆவடி மாநகராட்சி 40 வது வார்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் சா.மு நாசர் நேற்று தொடங்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *SIR திருத்தம் திருவள்ளூர் ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்*
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அவரவர் ஓட்டு சாவடி மையங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புதல், தொடர்பாக சந்தேகம் இருந்தால் உதவி மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் இந்த மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அளிக்கலாம்.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*