17/11/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
17/11/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *521*
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

 பேனாமுள் Karthick
✍️  *நவ-17*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியானது*

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும்

பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி 
தேர்வுகள் தொடங்கி 
23-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. 

24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை*

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில் தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால் சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான, ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *பூத் ஏஜன்டுகள் சமர்ப்பிக்க அனுமதி*

வாக்காளர்களால் நிரப்பப்பட்ட 50 கணக்கெடுப்பு படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்டுகள் பெற்று ஓட்டுச்சாவடி அலுவலரிடம் சமர்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *முட்டை விலை உயர்வு*

முதல் முறையாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகளை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிலோ முட்டைக்கோழி 112 ரூபாய் ஒரு கிலோ கறிக்கோழி 104 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முடிவு*

டிசம்பர் 12ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அடையார் முதல் மேற்கு தாம்பரம் வரை 7 புதிய பேருந்துகள்*

அடையார் முதல் மேற்கு தாம்பரம் பேருந்து நிலையம் வரை எண் 96-ஐ கொண்ட 7 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் இன்று நடக்கவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு*

சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20ம் தேதி(வியாழக் கிழமை) காலை 10 மணியளவில் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி*

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மைசூரில் உள்ள தென்னிந்திய பிராந்திய மொழி நிறுவனத்தின் சார்பில் 5 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இன்று (நவம்பர் 17) தொடங்கி 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி*

 செல்லப்பாணிகளுக்கான நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 2552 செல்ல பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பு ஊசி செலுத்தி மைக்ரோஷிப் பொருத்தப்பட்டது.

 பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூரில் விலங்கு ஆர்வலர்கள் பொதுமக்கள் மோதல்*

 அம்பத்தூர் பகுதியில் நாய்களுக்கு உணவு அளிப்பதில் விலங்கு ஆர்வலர்கள் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

 இதன் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் கணவர் ஓட்டிய கார் மோதி மனைவி பலி*

 ஆவடி ரெட்டிபாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிய கார் மோதி அவரது மனைவி இந்துமதி உயிரிழந்தார். தகவல் அறிந்து ஆவடி காவல் ஆய்வாளர் ஜெய் கிருஷ்ணன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments