தேதி
20/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *524*
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-20*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26052.65*
*பேங்க் நிப்டி : 59216.05*
*சென்செக்ஸ் : 85186.47*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12481*
*22 Kதங்கம்/ g. : ₹ 11445*
*வெள்ளி /g : ₹ 173.00*
பேனாமுள் Karthick
✍️ *இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்*
பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் 10-வது தடவையாக பதவியேற்க உள்ளார்.
அவரது பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *AI யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை*
AI தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *வங்கிகளின் இணையதள முகவரி டொமைனுக்கு மாற்றம்*
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் bank.in என முடியும் புதிய டொமைனுக்கு மாறியுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *புதிய அம்சங்கள் : கூகுள் மேப்ஸ்*
கூகுள் மேப்ஸ் 10 புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது.
நிகழ்நேர உரையாடல்களில் இப்போது ஈடுபடலாம்.
சில குறிப்பிட்ட நகரங்களில் நேரடியாக மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
விபத்து பகுதிகளை நெருங்கும்போது இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.
போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள், அப்டேட்ஸ்களை இப்போது வழங்க தொடங்கியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்*
ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்*
தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ந் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைப்பெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பார்சல்களை அனுப்ப தனி ரெயில்*
தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் வருகிற டிசம்பர் 12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு வாபஸ்*
டெட் தேர்வுக்கு இன்று விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பை பிற்பகலில் வாபஸ் பெற்றது. தேர்வு பற்றி முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *ஜனாதிபதியின் கேள்விகள்: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்*
மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *வாகன அனுமதி தள்ளி வைப்பு*
இரும்புலியூரில் போக்குவரத்து போலீஸ் தனியார் நிறுவனம் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ப்ரீகாஸ்ட் சுரங்கப்பாதையில் வாகனங்களை அனுமதிப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அறிவியல் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு டிசம்பர் முதல் விழிப்புணர்வு*
சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக வரும் டிசம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை பயிற்சி நடக்கிறது.
பயிற்சி கட்டணம் ரூ.4000.
விருப்பமுள்ள மாணவர்கள் tnstc.science@gmail.com < mailto:tnstc.science@gmail.com > என்ற மின்அஞ்சல் அல்லது 044-29520924 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஏஎல்டி திட்டத்திலுள்ள அரசு பள்ளியில் பயிலும் 10 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *சூரியன் FM சார்பில் வர்ணஜாலம் ஓவியப்போட்டி*
ஓவியப்போட்டி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஓவியப்போட்டி காலை 10 முதல் 11.30 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 86789 35935 என்ற சூரியன் எப்.எம்-ன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *நாளை வங்கி வைப்புத் தொகை மீட்பு முகாம்*
நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள் காப்பீட்டுத் தொகைகள் பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் நாளை வெள்ளிக்கிழமை காலை 11:00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு*
சென்னை மாநகராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை நேற்று வெளியிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் R.பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5 மதிப்பிலான சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *விடுதிகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம்*
தமிழக முழுவதும் செயல்படும் அரசு மற்றும் தனியார் விடுதிகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருப்போர் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றுகளை வைத்திருத்தல் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பாரதி நேரு தேசிய விழா போட்டிக்கு அழைப்பு*
திருவொற்றியூர் பாரதி பாசறை 41 ஆம் ஆண்டு பாரதி, நேரு தேசியக் கலை விழா இசை,ஓவியம்,கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள் வரும் 29ஆம் தேதி திருவொற்றியூர் தேரடி மாங்காடு எல்லப்பசெட்டியார் திருமண மாளிகையில் நடைபெறுகிறது. விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் நவம்பர் 25க்குள்
மா.கி ரமணன்
பாரதி பாசறை 39/13 கிராமத்தெரு,சோமசுந்தரம்
நகர்,4வதுதெரு, திருவொற்றியூர்
சென்னை 19 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் .
விபரங்களுக்கு 94441 82153 94442 98396 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சிறுவர் அறிவியல் பூங்கா திறப்பு*
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் அறிவியல் பூங்காவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *ரோந்து போலீசாருக்கு உத்தரவு*
இரவு நேர ரோந்து செல்லும் போலீசார் தெரு வாரியாக மூன்று நாட்களுக்கு மேல் பூட்டி கிடக்கும் வீடுகளை படம் பிடித்து இன்ஸ்பெக்டர்களின் whatsapp எண்களுக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட எஸ்பிக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *பொதுமக்கள் குறைதீர் முகாம்*
வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறை தீர்முகாம் நேற்று நடந்தது. இதில் மனுதாரர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கமிஷனர் அருண் பெற்றார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மாநகராட்சி மொத்தம் ரூ.42 கோடி வரி வசூல்*
ஆவடி மாநகராட்சியில் 6 மாதத்தில் 40 கோடி வரி வசூலித்துள்ளது.
அத்துடன் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று வரை ரூ.2 கோடி வரி வசூல் ஆவடி மாநகராட்சி செய்துள்ளது.
இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நேற்று வரை 42 கோடி வரி வசூல் செய்து ஆவடி மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மத்திய குற்ற பிரிவில் மீட்கப்பட்ட 5.97 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு*
ஆவடியில் நில மோசடி ஆன்லைன்,பங்குசந்தை வேலைவாய்ப்பு உள்ளிட்ட சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட 5.97 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உரியவர்களிடம் கூடுதல் கமிஷனர் பவனேஸ்வரி நேற்று ஒப்படைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணனூர் ரயில் நிலையத்தில் முதியவர் பலி*
அண்ணனூர் ரயில் நிலையத்தில் முதியவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர். தண்டவாளத்தை கடக்கும் போது சென்னைக்குச் சென்ற ரயிலில் அடிபட்டு அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*