21/11/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
21/11/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *525*
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.

பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

பேனாமுள் Karthick
✍️  *நவ-21*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26192.15*
*பேங்க் நிப்டி : 59347.70*
*சென்செக்ஸ் : 85632.68*

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12421*
*22 Kதங்கம்/ g. : ₹ 11390*
 *வெள்ளி    /g   : ₹ 173.00*

பேனாமுள் Karthick
✍️ *திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி*

சென்னையில் 01.12.2025 முதல் 05.12.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்கள். 8668102600 / 9943685468 .

 பேனாமுள் Karthick
✍️ *சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள் இயக்கம்*

சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல வசதியாக வரும் ஜனவரி மாதம் வரையில் 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அடுத்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகிறார்: விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி*

மக்கள் சந்திப்பு பயணத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும், ஒழுங்குபடுத்தவும் மக்கள் பாதுகாப்பு படையை விஜய் உருவாக்கி உள்ளார்.

ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி விரைவில் நிறைவுபெற இருக்கிறது. அந்த பயிற்சி முடிந்ததும் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர்கள் பங்கேற்று, கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

 பேனாமுள் Karthick
✍️ *மல்லை சத்யா புது கட்சி துவக்கம்*

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கியுள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *மூன்று பாடங்கள் மட்டும் எழுத அனுமதி*

10 ஆம் வகுப்புக்கான இரண்டாம்கட்ட பொதுத்தேர்வில் மூன்று பாடங்கள் மட்டுமே எழுதலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முதல் தேர்வு 
மே மாதத்தில் இரண்டாவது தேர்வு நடக்கும். முதல் தேர்வை அனைவரும் கட்டாயம் எழுத வேண்டும்

இரண்டாம் தேர்வை விருப்பப்படுவோர் மட்டும் எழுதலாம். முதல் தேர்வு எப்போதும் போல் அ னைத்து பாடங்களுக்கும் நடக்கும்.

இரண்டாவது தேர்வு தங்களின் மதிப்பெண்களை அதிகரிக்க விரும்புவோருக்கான தேர்வாக நடத்தப்படும்.

இரண்டாம் முறை தேர்வு எழுதுவோருக்கு அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் முதன்மையாகவும் மொழிப்பாடங்கள் விருப்ப தேர்வாகவும் அமையும்.

 பேனாமுள் Karthick
✍️ *தெற்கு ரயில்வேக்கு ரூ.22.97 கோடி கூடுதல் வருவாய்*

தெற்கு ரயில்வேயில் கடந்த 7 மாதங்களில் 5436 தற்காலிக பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 22.97 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்*

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே 200க்கும் மேற் பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 பேனாமுள் Karthick
✍️ *குழந்தை தொழிலாளர்கள் கோயம்பேடு சந்தையில் மீட்பு*

கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளர்கள் 16 பேரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமலாக்க துறை மீட்டது.

பேனாமுள் Karthick
✍️ *வண்டலுார் உயிரியல் பூங்கா : விர்ச்சுவல் ரியாலிட்டி*

 யானை, புலி,ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குளை தொட்டு பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் மெய்நிகர் காட்சிக்கூடம் வண்டலுார் உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *மெட்ரோ பணி : மூதாட்டி காயம்*

கஸ்துாரி 70 என்ற மூதாட்டி பூ வாங்க நேற்று காலை கோயம்பேடு பூ சந்தைக்கு ஆட்டோவில் வந்தார்.காலை 9:30 மணிக்கு கோயம்பேடு பூ சந்தை இ சாலையில் 4 எண் நுழைவாயல் அருகே ஆட்டோவில் அமர்ந்திருந்த போது மெட்ரோ ரயில் திட்ட பணி இடத்தில் இருந்து 3 அடி நீள இரும்பு குழாய் ஆட்டோ மீது விழுந்தது.இதில் ஆட்டோ சேதமடைந்ததோடு உள்ளே இருந்த மூதாட்டி கஸ்துாரியின் வயிறு மற்றும் தோள் பகுதியில் காயம் ஏற்ப்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 பேனாமுள் Karthick
✍️ *நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி*

தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், அதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *காவலாளியின் விரலை கடித்தவரால் பரபரப்பு*

 தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஊசி போடும் அறையை தவறாக காட்டியதால் ஆத்திரமடைந்த நபர் காவலாளி விரலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *23ஆம் தேதி கடைசி வாய்ப்பு*

 செல்லப்பிராணிகள் பதிவிற்கு கடைசி சிறப்பு முகாம் நாளை மறுதினம் திரு.வி.க நகர், புளியந்தோப்பு ,லாயிட்ஸ் காலனி , நுங்கம்பாக்கம் ,கண்ணம்மாபேட்டை ,மீனம்பாக்கம் ,
சோழிங்கநல்லூர் ஆகிய 7 இடங்களில் நாய்களுக்கான சிகிச்சை மையங்கள் நடக்க உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு*

 மருத்துவமனை ஊழியர்களுக்கு யாரும் பணம் தர வேண்டாம். அவ்வாறு கேட்பவர்கள் குறித்து 9381041296 என்ற மொபைல் போன் எண்ணில் தெரியப்படுத்த வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *ஸ்பாட் புக்கிங் சபரிமலை*

 சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் தினசரி எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24 வரை இது அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 பேனாமுள் Karthick
✍️ *செஸ் தொடர் சென்னையில் துவக்கம்*

 தேசிய சாஸ்திர சாம்பியன்ஷிப் போட்டி அடையாரில் உள்ள மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்க உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்*

 திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் வருகிற 4 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் தைலாபிஷேகம் நடைபெறுகிறது. 
தொடர்ந்து 5, 6 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி பக்தர்கள் தரிசிக்க முடியும்.

 பேனாமுள் Karthick
✍️ *நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை பகுதியில் 2 நாட்கள் மின் நிறுத்தம்*

 நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை துணைமின் நிலையத்தில் பழைய பிரேக்கர்கள் நீக்கப்பட்டு புதிய பிரேக்கர்கள் அமைக்கும் பணிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் இந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்த உடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.

பேனாமுள் Karthick
✍️ *அண்ணனூரில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு*

 ஆவடி அருகே உள்ள அண்ணனூரில் புதிய பள்ளி கட்டிடத்தை முதல்வர் 
மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் 
சா.மு.நாசர் கலந்து கொண்டு புதிய கட்டடத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்வில் 
ஆவடி மேயர் மு.உதயகுமார் ஆணையர் ஆர்.சரண்யா மண்டல குழு தலைவர் 
ஜி.ராஜேந்திரன் 
திமுக மாநகர செயலாளர் 
சண்.பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் 2 நாட்கள் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம்*

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் நாளை 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் ஓட்டு சாவடி மையங்களில் உதவி மையங்கள் செயல்பட உள்ளன. இதில் கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்வது சந்தேகங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்* 

 ஆவடி காவல் ஆணையரகத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

 திருவேற்காடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மணலி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், மணலி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் திருவேற்காடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதேபோல் பூந்தமல்லி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பொன்னேரி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் பொன்னேரி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன் பூந்தமல்லி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் மாடுகள் பிடிப்பு*

 ஆவடியில் இதுவரை 174 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் 4.08 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *மின் மாற்றிகள் நியாய விலை கடை : அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்*

 ஆவடி தொகுதிக்குட்பட்ட கோயில் பதாகை பவுண்ட் தெரு, ஈஸ்வரி அவன்யூ, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் 3 புதிய மின் மாற்றிகள் மற்றும் திருமுல்லைவாயல் செந்தில் நகரில் புதிய நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டிற்கு புதன்கிழமை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments