தேதி
25/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *529*
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்.
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-25*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25959.50*
*பேங்க் நிப்டி : 58835.35*
*சென்செக்ஸ் : 84900.71*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12509*
*22 Kதங்கம்/ g. : ₹ 11470*
*வெள்ளி /g : ₹ 171.00*
பேனாமுள் Karthick
✍️ *அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் : துணை முதல்வர்*
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.11.2025) திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பேனாமுள் Karthick
✍️ *211 மருந்துகள் தரமற்றவை: மத்திய அரசு அறிவிப்பு*
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்திய பரிசோதனையில் 211 மருந்துகள் தரமற்றதாகவும் 5 மருந்துகள் போலியாகவும் இருந்தன என மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த விபரங்கள், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம்.
பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்*
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.3, 4ல் 160 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பாடத் திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்*
2026-27ம் கல்வியாண்டு முதல் படிப்படியாக பாடத் திட்டங்கள் மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ரெயில் சேவைகளில் மாற்றம்*
பராமரிப்பு பணி காரணமாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் வருகிற 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திண்டிவனம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வங்கக்கடலில் புயல் சின்னம்*
வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்தால் புயலாக மாற வாய்ப்புள்ளது, தமிழகத்தில் இன்று (நவ. 25) நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தடகளம் போட்டியில் தமிழக போலீசார் அசத்தல்*
ஆசியா மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தமிழக போலீசார் 33 பதக்க ங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஆன்லைன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்*
காலாவதியான இட்லி மாவை ஆன்லைனில் விற்பனை செய்த பிளிங்கிட் நிறுவனத்திற்கு தமிழக உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது*
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை ஐஐடியை சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அழைப்பு*
சென்னை ஐஐடி ஓபன் ஹவுஸ் 2026-ஐ ஜனவரி 2 முதல் 4ம் தேதி வரை நடத்த உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் https://www.shaastra.org/open-house என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பேனாமுள் Karthick
✍️ *டிச.15ம் தேதி முதல் ரூ.1,000*
விடுபட்ட அனைத்து மகளிருக்கும் வருகிற டிசம்பர் 15ம் தேதி முதல் மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் வந்து சேரும் என்று திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பேனாமுள் Karthick
✍️ *குரூப் 1 மெயின் தேர்வு வரும் 1ம் தேதி தொடக்கம்*
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 பணிக்கான மெயின் தேர்வு வரும் 1ம் தேதி தொடங்குகிறது.
பேனாமுள் Karthick
✍️ *தென்காசியில் கோர விபத்து*
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி மேலும் 70 பேர் காயம் அடைந்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *தொலைதொடர்பு துறை எச்சரிக்கை*
உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்பட்டு நடக்கும் சைபர் மோசடி மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கப்படலாம் என தொலைதொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *படிவம் வழங்க கால நீட்டிப்பு இல்லை*
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு படிவம் வழங்குவதற்கு கால நீட்டிப்பு இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *செம்மொழி பூங்கா இன்று திறப்பு*
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *சபரிமலையில் உடனடி தரிசனம் முன்பதிவு மீண்டும் குறைப்பு*
சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் இன்று முதல் உடனடி தரிசனத்திற்கு முதலில் வரும் 5000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *காவிக்கொடி ஏற்றுகிறார் : பிரதமர்*
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் 161 அடி உயரம் உள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காவிகொடி ஏற்ற உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூர் சார் பதிவாளர் கைது*
1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்ய உதவியதாக அம்பத்தூர் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
பேனாமுள் Karthick
✍️ *கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் உயர்வு*
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில் ஒரு கிராம் தங்கத்துக்கு 7000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *உணவுத்துறை விழிப்புணர்வு வீடியோ வெளியீடு*
ஆன்லைன் வணிகத்தில் பொருட்கள் வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 விழிப்புணர்வு வீடியோக்களை தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
www.tnpds.gov.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் நுகர்வோர்
044- 28592828 என்ற தொலைபேசி எண் மற்றும்
consumer@tn.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்*
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் நாளை நேர்காணல்*
கூட்டுறவுத்துறை உதவியாளர் பணிக்கு நாளை திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை
www.drbtvl.in
என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு
73387 49121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி
*பேனாமுள் பாடி பா. கார்த்திக்*