தேதி
28/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *532*
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-28*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26215.55*
*பேங்க் நிப்டி : 59737.30*
*சென்செக்ஸ் : 85720.38*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12770*
*22 Kதங்கம்/ g. : ₹ 11710*
*வெள்ளி /g : ₹ 180.00*
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பட்டியல் : பெயர் இல்லாதோர் டிச.9 முதல் ஜன.8 வரை விண்ணப்பிக்கலாம்*
3 முறை வீடு தேடி சென்றும் கணக்கெடுப்பு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நாளை மறுநாள் சென்னையை நெருங்கும் : டிட்வா புயல்*
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இது நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை ஒன் செயலியில் மாத பாஸ் வசதி*
சென்னை ஒன் செயலி வாயிலாக மாதாந்திர மாநகர பஸ் பாஸ் பெறும் வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் அடுத்தவரின் கடையை வாடகைக்கு விடுவதாக 7லட்சம் மோசடி*
அம்பத்துாரைச் சேர்ந்த ரமேஷ்க்கு அண்ணா நகரை சேர்ந்த வித்யாராமன் என்பவர் அறிமுகமாகி ஆவடி சி.டி.எச் சாலையில் உள்ள கடையை வாடகைக்கு தருவதாக கூறி ரூ. 7 லட்சம் அட்வான்ஸ் பெற்று ஒப்பந்தம் செய்துள்ளார்.
பின் ரூ. 60,000 வரை செலவு செய்து ரமேஷ் கடையை தயார் செய்த போது கடையின் நிஜ உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் வந்து பணிகளை நிறுத்தியுள்ளார்.
இதனால் ரமேஷ் நேற்று அளித்த புகாரின்படி ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர்*
இந்தியாவிலேயே மிகவும் உயரமான 77 அடி உயர ராமரின் வெண்கல சிலையை கோவாவில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு*
வாக்காளர் பட்டியல் கணக்கீடு படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *எஸ் ஐ ஆர் படிவத்தில் உறவினர் விவரம் கட்டாயம் இல்லை*
எஸ் ஐ ஆர் கணக்கிட்டு படிவத்தில் உறவினர் விவரம் கட்டாயம் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *மருந்து எதிர் விளைவுகள்: கியூ ஆர் குறியீடு உதவி எண் வெளியீடு*
பொதுமக்கள் மருந்து எதிர் விளைவுகள் குறித்து எளிதில் தகவல் அளிப்பதற்காக கியூ ஆர் குறியீடு மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மருந்தகங்களில் காட்சிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
1800 180 3024 என்ற உதவி எண் அல்லது கியூ ஆர் குறியீடு மூலம் பொதுமக்கள் எதிர் விளைவுகளை தெரிவிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் 4 நாள் நம்ம ஊர் திருவிழா*
சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் மக்களுக்கு நாட்டுப்புறக் கலை அனுபவத்தை வழங்க தமிழக அரசு நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் விழாவை நடத்த முடிவு செய்துள்ளது. இது எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடக்க உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நாம சங்கீர்த்தன விழா*
தி நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் இன்று முதல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை நாம சங்கீர்த்தன விழா நடைபெறுகிறது இன்று மாலை 6 மணிக்கு துவங்குகிறது.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல்*
தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சிகள் அனைத்து கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்துவதற்காக அரசு மானிய விலையில் உறைவிந்து குச்சிகள் வழங்கப்படுகின்றன.
விபரங்களுக்கு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களை அணுகி பயனடையலாம். செயற்கை முறை முதல் கருவூட்டலுக்கு 175 ரூபாய் இரண்டாம் முறை 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கபடுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *Dr. MGR மருத்துவ பல்கலையில் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு*
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டிச.13 க்குள் பல்கலை பதிவாளரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலை தெரிவித்துள்ளது. விபரங்களை https://tnmgrmu.ac.in இணையதளத்தில் அறியலாம்.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*