தேதி
3/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *508*
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-03*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ*
எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 5.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பேனாமுள் Karthick
✍️ *மகளிர் உலக கோப்பை; முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா அசத்தல்*
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பேனாமுள் Karthick
✍️ *தெரு நாய்கள் தொடர்பான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை*
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. சம்மன்*
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 306 பேருக்கு சி.பி.ஐ.அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *234 தொகுதிகளிலும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்தம் துவக்கம்*
மாநிலம் முழுதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி நாளை துவங்கவுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: ரஷ்யா*
ரஷ்யா கபரோவ்ஸ்க் என்ற பெயரில் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நேற்று அறிமுகம் செய்தது. இது பொஸைடான் எனப்படும் அணு ஆயுத ட்ரோன் ஏந்திச் செல்லும் திறன் கொண்டது.
பேனாமுள் Karthick
✍️ *தமிழ்நாடு முழுவதும் 59 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்*
தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ரூ.1.37 கோடி ஒப்படைப்பு: சென்னை சைபர் க்ரைம் போலீசார்*
கடந்த அக்டோபர் மாதம் சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட 1.37 கோடி பணத்தை 109 புகார்தாரர்களிடம் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஜேஇஇ தேர்வுக்கு நவ.27க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*
வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ மெயின் தேர்வுக்கு நவ.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தேர்தல் ஆணையம் மீது வழக்கு:அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்*
ஜனநாயக விரோத-சட்ட விரோத எஸ்ஐஆர் முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் வழக்கு தாக்கல் செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பீகாரில் நாளை பிரசாரம் ஓய்கிறது*
பீகாரில் வரும் 6ம் தேதி முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *ரூ.1.96 லட்சம் கோடி அக்டோபர் மாதம் ஜி எஸ் டி வசூல்*
அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வசூலானது சுமார் ரூ.1.96லட்சம் கோடியாக உள்ளது. இது 2024ம் ஆண்டு அக்டோபரில் வசூலியான ரூ.1.87லட்சம் கோடியை காட்டிலும் 4.6 சதவீதம் அதிகமாகும்.
பேனாமுள் Karthick
✍️ *கொளத்தூர் அருகே வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு*
கொளத்தூர் அருகே 3 வாலிபர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *கல்லறை திருநாள் அனுசரிப்பு*
சென்னையில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. உறவினர்களின் கல்லறைக்கு சென்று கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *தனியார் நிறுவன ஊழியருக்கு பாராட்டு*
கோட்டூர்புரத்தில் சாலையில் கிடந்த ரூ 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் சாலை பள்ளங்கள் சீரமைப்பு : மாநகராட்சி தகவல்*
வடகிழக்கு பருவமழை காரணமாக 5148 இடங்களில் சாலை பள்ளம் கண்டறிந்து தற்போது 4503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு பணி முடிவடைந்துள்ளது. 667 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கொரட்டூர் திருநின்றவூர் பெரியபாளையம் சாலை திறப்பு*
4 வழிச்சாலையாக அமைக்கப்பட்ட கொரட்டூர் திருநின்றவூர் பெரியபாளையம் சாலை காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு : வழிகாட்டுதல் திட்டம்*
திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
ஆட்சியர் மு.பிரதாப்
ஆவடி ஆணையர் கி.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தி