தேதி
5/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *509*
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம்
தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-05*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25597.65*
*பேங்க் நிப்டி : 57827.05*
*சென்செக்ஸ் : 83459.15*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12241*
*22 Kதங்கம்/ g. : ₹ 11225*
*வெள்ளி /g : ₹ 165.00*
பேனாமுள் Karthick
✍️ *தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி*
முதல் முறையாக பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *தவறான தகவல் தந்தால் ஓராண்டு சிறை*
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு படிவத்தில் தவறான தகவல் அளிக்கும் வாக்காளர்களுக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டி இன்று துவக்கம்*
23வது ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் இன்று துவங்குகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா உட்பட 27 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *7 மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்*
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும். இதேநிலை நாளையும் தொடரும். இதையடுத்து அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்*
பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 8ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்*
ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.
பேனாமுள் Karthick
✍️ *திமுக சார்பில் உதவி மையங்கள் அமைப்பு*
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடும் திமுகவினருக்கு எழும் கேள்வி சந்தேகங்களுக்கு உதவ உதவி மையம் அமைக்கப்பட்டது.
திமுக நிர்வாகிகள், 80654 20020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு பதிலை பெறலாம்.
பேனாமுள் Karthick
✍️ *ChatGPT ஆலோசனைகளை வழங்காது*
ChatGPT இனிமேல் சட்டம் மருத்துவம் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்காது என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல்*
விண்ணப்பப் படிவத்தை சென்னை தலைமை அஞ்சல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பி.எல்.ஐ பிரிவில் நேர்காணல் நாளன்று காலை 10 மணி முதல் நேரில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நேர்காணல் சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நவம்பர் 7ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.
விவரங்களுக்கு 9940221297, 044-25212549 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை அரை மாரத்தான் ஓட்டம்*
சென்னை அரை மாரத்தான் ஓட்டம் வரும் டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது.
https://chennainavyhalfmarathon.com/ எனும் இணையதள பக்கத்திற்கு சென்று விருப்பம் உள்ள பொதுமக்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சபரிமலையில் தங்கும் அறைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்*
பூஜைகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (5ம் தேதி) தொடங்குகிறது. பூஜைகளுக்கும், அறைகளுக்கும் www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சாட் ஜிபிடியின் கோ-1 சேவை ஒரு வருடத்துக்கு இலவசம்*
இந்திய பயனாளர்களுக்கு சாட் ஜிபிடியின் கோ-1 சேவை ஒரு வருடத்துக்கு இலவசமாக அளிக்கப்படும் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்*
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 5.11.2025 புதன் கிழமை இன்று காலை 10.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *தவெக சிறப்பு பொதுக்குழு இன்று கூடுகிறது*
சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.
விஜய்யின் பேச்சை அனைவரும் கேட்க அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியது*
மணலியில் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முகத்தில் துணியை கட்டி கொண்டு தொழிற்சாலையை மக்கள் கடந்து சென்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *சிறுவனுக்கு போலீசார் உதவி*
ஆவடியில் சிறுவனின் பள்ளி படிப்பை தொடர உதவிய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் அழைத்து ஆணையர் கி. சங்கர் பாராட்டினார்.
பேனாமுள் Karthick
✍️ *போலி விசா தயாரித்தவர் கைது*
போலி விசா தயாரித்து கொடுத்த சேரலாதன் என்பவரை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*