தேதி
6/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *510*
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-06*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12143*
*22 Kதங்கம்/ g. : ₹ 11135*
*வெள்ளி /g : ₹ 163.00*
பேனாமுள் Karthick
✍️ *பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல்; 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு*
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் ரூ.2.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை*
சென்னையில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை வறுமை காரணமாக வளர்க்க முடியாமல் தவித்த தம்பதியினர் விற்க முடிவு செய்தனர்.
இதில் குழந்தையின் தந்தை ஸ்ரீஜி, அவரது மனைவி வினிஷா, மாமியார் சரளா, சிவரஞ்சனி, சகாயமேரி, சுமதி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *இணையும் கமல் - ரஜினி*
நடிகர் ரஜினியின் 173வது திரைப்படத்தை, நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. திரையுலகில் 44 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஹாக்கி போட்டி*
14வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி வரும் 28ம் தேதி முதல், டிச.10ம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் மதுரை எஸ்.டி.ஏ.டி ஹாக்கி மைதானம் ஆகியவற்றில் நடக்க உள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *4-வது டி20; இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்*
4-வது 20 ஓவர் போட்டி கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
பேனாமுள் Karthick
✍️ *ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: சென்னையில் தொடங்கியது*
23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்*
பி.எட்., சிறப்பு பி.எட்., எம்.எட்., சிறப்பு எம்.எட்., -- பி.எஸ்.சி., பி.எட்., - பி.ஏ. பி.எட்., செமஸ்டர் தேர்வுகள்
இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மறுகூட்டல் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியர் வரும் 10ம் தேதிக்குள் அந்தந்த கல்லுாரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் கைது*
துாய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய மாநகராட்சியை கண்டித்தும் பணி நிரந்தரம் கோரியும் துாய்மை பணியாளர்கள் மெரினா கடலில் இறங்கி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *மக்கள் குறைதீர் முகாம் கமிஷனரிடம் மனு*
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பொது மக்களுக்கான குறைதீர் முகாம் நடந்தது. இதில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து 18 மனுக்களை போலீஸ் கமிஷனர் அருண் பெற்றார்.
பேனாமுள் Karthick
✍️ *சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்*
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
பேனாமுள் Karthick
✍️ *ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்*
பட்டமேற்படிப்புக்கான தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
பேனாமுள் Karthick
✍️ *கேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு தேதி மாற்றம்*
ஹால்டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது
தேர்வுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 12ல் வெளியிடப்படும் என்று கோழிக்கோடு ஐஐஎம் அறிவித்துள்ளது. iimcat.ac.in எனும் வலைத்தளத்தில் சென்று ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்*
தமிழகம் முழுவதும் 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுரை*
சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்*
வேப்பேரியில் உள்ள எழும்பூர் துணை மின் நிலையம், ஆவடி எஸ்.எம். நகரில் உள்ள துணை மின் வளாகம் மற்றும் பெரம்பூர் எம்.இ.எஸ். ரோடு, சிம்சன் எதிரில் உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகம் ஆகிய 3 கோட்டங்களுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்*
திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று (6ம் தேதி) காலை 11 மணி முதல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தற்கொலை*
திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த ஹரிணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி காவல் கமிஷனரகத்தில் பறிமுதல் செய்த கஞ்சா எரித்து அழிப்பு*
ஆவடி காவல் கமிஷனரகதிருக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் சுமார் 600 கிலோ கஞ்சா,கஞ்சா சாக்லேட்,போதை மாத்திரைகள், மெத்தப்பட்டமயின் என மொத்தம் 60 லட்சத்து 37 ஆயிரத்து 750 மதிப்புடைய போதை பொருட்களை
ஆவடி கமிஷனர் சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியா நிறுவனத்தில் நேற்று தீ வைத்து எரித்து அளிக்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் தெருக்களுக்கு பெயர் பலகை வைக்க தீர்மானம்*
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பெயர்பலகை இல்லாத தெருக்களுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பெயர் பலகை அமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *வரும் 10 ஆம் தேதி ஏலம்*
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பழுதான வாகனங்கள் வரும் 10 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளன.
விபரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி அருகே ஓட்டலில் சாம்பாரில் புழு*
ஆவடி அருகே பாலவேடு வெளிவட்ட சாலையில் உள்ள விநாயகா மெஸ் என்ற ஹோட்டலில் சாம்பாரில் புழு இருந்ததாக புகார் எழுந்ததில்
ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததால் இருதரப்பு கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *மீன் வளர்ப்பு பயிற்சி*
சென்னை மாதவரம் மீன் பல்கலை வளாகத்தில் 14 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 87546 78309 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சைக்கிள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை*
மெட்ரோ ரயில்களில் சைக்கிள் எடுத்து செல்ல அனுமதி இல்லை என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *கொடிக்கம்பங்களுக்கு அனுமதி பெறுவதை கட்டாயம்*
சென்னையில் தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி பெறுவது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வரும் 8ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்*
சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் வரும் 8ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*