தேதி
7/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *511*
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-07*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25509.70*
*பேங்க் நிப்டி : 57554.25*
*சென்செக்ஸ் : 83311.01*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12252*
*22 Kதங்கம்/ g. : ₹ 11235*
*வெள்ளி /g : ₹ 164.00*
பேனாமுள் Karthick
✍️ *பீகார் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு: 64.66 சதவீத வாக்குகள் பதிவு*
நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வாக்குச்சாவடி அலுவலரை அறிந்துகொள்ள இணையதள முகவரி*
https://erolls.tn.gov.in/blo/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் பகுதி வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்-நடிகர் அஜித் விளக்கம்*
எனது பேட்டி திரித்து கூறப்பட்டு விட்டது. விஜய்க்கு எப்போதுமே நல்லதே நினைத்து இருக்கிறேன் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *4-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா*
இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேனாமுள் Karthick
✍️ *2026 டி20 உலகக் கோப்பை: 5 இடங்கள் தேர்வு*
இந்தியாவில் சென்னை ,ஆமதாபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *இளைஞர்களின் பைக் ரேசால் விபரீதம்*
ராயப்பேட்டையில் மூடப்பட்டிருந்த மேம்பாலத்தில் அத்துமீறிய இளைஞர்களின் பைக் ரேசால் நடந்த கோர விபத்தில், கல்லுாரி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை*
சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்களின் விபர பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. வீடு பூட்டியிருந்தாலும் பூர்த்தி செய்த படிவங்களை பெற 3 அல்லது 4 முறை அலுவலர்கள் செல்வர்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 படிவத்தில்
1 றை வைத்து கொண்டு மற்றொன்றை அலுவலரிடம் வழங்க வேண்டும்.
டிச.4 வரை இப் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் பதற்றமின்றி படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். சந்தேகம் இருந்தால் 044 - 2561 9523 மற்றும் 1950 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *திருமுல்லைவாயிலில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு*
ஆவடி மாநகராட்சி சார்பில், 7, 8, 9வது வார்டுகளுக்கு உட்பட்ட தென்றல் நகர் கிழக்கு, வெங்கடாசலம் நகர், அன்னை தெரசா நகர், எட்டியம்மன் நகர், மாசிலாமணீஸ்வரர் நகர் உட்பட தெருக்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 260 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டன.
மேலும் வீட்டு உரிமையாளர்களுக்கு 29,900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *ஆட்டோ ரேஸ்*
மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையறிந்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *2 நாள் பயணமாக டெல்லி சென்றார் உதயநிதி*
துணை முதல்வர் உதயநிதி 2 நாள் பயணமாக நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்*
பதக்கம் முதல்வரால் 26.1.2026 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் 15.
பேனாமுள் Karthick
✍️ *வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு*
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் வரும் 11ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்*
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பிரசாரம் மேற்கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து அனைத்துக்கட்சிகளுடன் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு புதிய வரைவு வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம் - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு*
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கணக்கிடும் கை கடிகாரம் வடிவிலான புதிய கருவியை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.
பேனாமுள் Karthic
✍️ *பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்*
பிரதமர் மோடி வாரணாசியில் நாளை வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *திருப்பதி ஏழுமலையான் கோயில் அங்க பிரதட்சணம் டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்*
ஆன்லைனில் வெளியிடும்போது முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் டோக்கன்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்*
தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழ்வை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *தொழிலாளர் ஆணையர் அலுவலகம் அண்ணாநகர் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்*
தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் இணை ஆணையர்-1 அலுவலகம் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர்-2 அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் புதிய அலுவலக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
தொழிலாளர் ஆணையரகம் தொழிலாளர் அலுவலர் குடியிருப்பு வளாகம் பி-பிளாக் 6-வது நிழற்சாலை அண்ணா நகர் சென்னை - 600 040 என்ற புதிய முகவரியில் வரும் 10ம்தேதி முதல் செயல்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 10 வகையான போட்டிகள்*
பங்கேற்பவர்கள் ரீல்ஸ் மற்றும் கட்டுரை ஓவியங்களை டிசம்பர் 5ஆம் தேதி க்குள் அனுப்ப வேண்டும்.
உயிர் காத்த முகாம் ஆரோக்கியத்தின் திருவிழா பாரம்பரியமும் ஆரோக்கியமும் உங்களில் உரத்த குரல் இது போட்டிகளின் விவரங்கள் ஆகும்
tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
கியூ ஆர் கோடு மற்றும் வாட்ஸ்அப் எண் 9498042408 என்ற எண்ணுக்கு ஒரு ஹாய் மெசேஜ் அனுப்பி லிங்கை பெற்று அனுப்பலாம்.
பேனாமுள் Karthick
✍️ *பேருந்துகள் தற்காலிக இடம் மாற்றம்*
வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தை மறு சீரமைக்க கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால் 57,57x, 57a,48b, 48bx, 48c, 48k,547a, 592v 48 act, 56m ஆகிய பேருந்துகள் தற்காலிகமாக சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 8/11/2025 முதல் இயக்கப்படும்.
பேனாமுள் Karthick
✍️ *திருப்பதி செல்லும் 4 ரயில்களின் சேவைகள் மாற்றம்*
திருப்பதி செல்ல வேண்டிய 4 முன்பதிவு இல்லாத ரயில்கள் திருச்சானூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *செல்ல பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த 6 இடத்தில் சிறப்பு முகாம்*
திருவிக நகர், புளியந்தோப்பு, லாய்ஸ்காலனி, நுங்கம்பாக்கம்,கண்ணம்மாபேட்டை,மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் வரும் 9,16 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். முகாமில் மைக்ரோ சிப் பொருத்தப்படும். தடுப்பூசி போடப்படும். இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
பேனாமுள் Karthick
✍️ *குழந்தைகள் மையத்தில் பணியிடம்*
மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க் எனும் ரயில் நிலையங்களில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
21 வயது முதல் 52 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். https://chennai.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 15-ம் தேதி மாலை 5 40 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
பேனாமுள் Karthick
✍️ *போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி*
அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகளை காலை 7:00 மணி முதல் 9 மணி வரை
இரவு 7 மணி முதல் 9 மணி வரை கல்வி தொலைக்காட்சியில் காணலாம்.
https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுப்புகள் ஒளிபரப்பை காண்பதுடன் பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் ரேஷன் குறை தீர் முகாம்*
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*