8/11/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
8/11/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *512*
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️  *நவ-08*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25492.30*
*பேங்க் நிப்டி : 57876.80*
*சென்செக்ஸ் : 83216.28*

பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12198*
*22 Kதங்கம்/ g. : ₹ 11185*
 *வெள்ளி    /g   : ₹ 165.00*

பேனாமுள் Karthick
*உயிர்பலி வாங்க காத்திருக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7,அம்பத்தூர் எஸ்டேட்,சிட்கோ,அய்மா விற்கு உட்பட்டிருக்கும் ஆம்பிட் ரோட்டில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டி அந்த வழியாக செல்லும் மக்களின் வேண்டுகோள்*

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல்-7, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அய்மா விற்கு உட்பட்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையம் மற்றும் ஆம்பிட் கம்பேனி அருகில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது இரவில் வாகனத்தில் செல்பவர்கள் அந்த பள்ளம் தெரியாததால் வாகனவிபத்து ஏற்படுகிறது 

இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ஒருவர் பள்ளம் தெரியாததால் இருசக்கர வண்டியில் வந்த அந்த நபர் 
பள்ளத்தில் விழுந்து கை உடைந்து கீழே விழுந்தார் அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து அந்த இடத்தில்  இதே போன்று விபத்து நடைபெறுகிறது    

சிட்கோ,அய்மா விற்கு உட்பட்ட இடம் என்பதால் உடனடியாக  இந்த ரோட்டில் உள்ள பள்ளத்தை யாரும் சரிசெய்வது இல்லை எந்த அதிகாரிகளிடம் தகவல் கூறினாலும் இந்த இடம் எங்களுக்கு உட்பட்ட பகுதி கிடையாது என்று கூறுகிறார்கள் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி வழியாக வாகனத்தில் செல்லும் மக்களின் பணிவான வேண்டுகோள்

✍️ *தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பஸ்கள் செல்லாது: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு*

கேரள மாநில அதிகாரிகள் 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்ததால் தமிழகத்தில் இருந்து அம்மாநிலத்திற்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது நேற்று மாலையிலிருந்து நிறுத்தப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *தொலைதூரப் படிப்புகளில் ‘அரியர்' மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு*

1981-82-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் தொலைதூரப் படிப்புகளில் படித்து ‘அரியர்’ வைத்திருக்கும் மாணவர்கள் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இளங்கலை, முதுகலை, பி.எல்.ஐ.எஸ். எம்.எல்.ஐ.எஸ். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடக்கிறது.

www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பேனாமுள் Karthick
✍️ *பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்*

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் காலை 8:45 மணி முதல் மாலை 4:30 மணி வரை சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், முகாமை துவக்கி வைக்க உள்ளனர்.

பேனாமுள் Karthick
✍️ *காலை 8-10 மணி வரை ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம்*

காலை 8-10 மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டாய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் இணைக்கப்படாத பயணிகள் இந்த 8-10 மணி நேரத்திற்கு பின்னர் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைப்பு*

சென்னையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேயில் உள்ள உதவி மையங்களை 044-25619523, 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதர 6 சட்டமன்றத் தொகுதிகளில் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மற்றும் மதுரவாயல் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார்.

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044-29541715 ; 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044-27237107; 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்*

 நாடு முழுவதும் கல்வி மையங்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் நாய்கள் நுழைவதை தடுக்க வேலி அமைக்க வேண்டும். பொது இடங்களில் சுற்றி தெரியும் தெரு நாய்களை 2 மாதங்களுக்குள் பிடித்து காப்பகத்தில் அடைக்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *சபரிமலையில் பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை: கேரள ஐகோர்ட்*

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *மாநகராட்சி கமிஷனர் தகவல்*

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது கணக்கிட்டு படிவங்களை நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவார்கள் என மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்  தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *சரக்கு ரயில் இயக்கி சோதனை*

வேளச்சேரி பரங்கிமலை இடையே மேம்பால பணிகள் முடிந்துள்ள நிலையில் முதல் முறையாக நேற்று சரக்கு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்*

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையத்தில் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு குழு விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

பேனாமுள் Karthick
✍️ *உணவு தயாரிப்பு கூடத்தில் தீ விபத்து*

திருமழிசை அருகே வண்டலுார் நெமிலிச்சேரி நெடுஞ்சாலையில் வயலாநல்லுார் பகுதியில் அன்னபூர்ணா நிறுவனத்தின் உணவு தயாரிப்பு கூடத்தில் நேற்று காலை 7:00 மணியளவில் சமையலறையில் உள்ள சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஆவடி மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *தண்டையார்பேட்டையில் சோகம்*

குப்பை லாரியின் சக்கரத்தில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தண்டையார்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *மெரினாவில் ஆட்டோ டிரைவர் கொலை*

 மெரினா கடற்கரை மணற்பரப்பில் நேற்று அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேனாமுள் Karthick
✍️ *பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு*

 பூண்டியிலிருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *குன்றத்தூர் நாகேஸ்வர சுவாமி கோயிலில் அன்னதான கூடம்*

 குன்றத்தூர் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் அன்னதான கூடம் மற்றும் நிர்வாக அலுவலகத்தை அமைச்சர் அன்பரசன்,
 பி.கே. சேகர் பாபு ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *கொரட்டூரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு*

 சென்னை கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் 31 வது தெருவில் மரம் ஒன்று நேற்று வேரோடு சாய்ந்து மற்றும் மரம் மீது விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேனாமுள் Karthick
✍️ *விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்*

 திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் பயிருக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணி அமையாமல் தடுத்தார் : வைகோ*

 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணி அமைய விடாமல் எனக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செய்த தவறுக்கான பலனை தற்போது அவர் அனுபவிக்கிறார் என்று வைகோ கூறியுள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில்  மாடுகள் சிறைபிடிப்பு*

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் சுற்றி திரிந்த 19 மாடுகள் பிடிக்கப்பட்டதாகவும் அதன் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேனாமுள் Karthick
✍️ *ஆவடி தொகுதிக்கு வளர்ச்சி திட்ட பணி*

ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரம் பகுதியில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்க உள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *ரெயில்வேயில் 2,569 பணி இடங்கள் : விண்ணப்பிக்கலாம்*

30-11-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர், வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் போன்ற பணிகளுக்கு இந்த ஆட்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பணிக்கு மட்டும் அது சார்ந்த பி.எஸ்சி பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

31-11-2025 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பேனாமுள் Karthick
✍️ *ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 இன்று கடைசி ஆட்டம்*

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும்.

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்* 
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments