தேதி
9/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *513*
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-09*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *ஆன்லைனில் வணிக கல்வி*
பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு வணிக கல்வி குறித்து இலவச ஆன்லைன் படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.
மாணவர்கள் https://swayam.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பேனாமுள் Karthick
✍️ *புதிய செயலி*
டி.ஏ.இ.ஐ. எனும் அவசர சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்க புதிதாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கலெக்டர் எச்சரிக்கை*
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நம்ம சென்னை கார்டு அறிமுகம்*
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் எபிக்ஸ் காஷ் இப்போ பே நிறுவனங்கள் இணைந்து நம்ம சென்னை கார்டு அறிமுகம் செய்துள்ளது.
இதை வைத்து
பேருந்து, மெட்ரோ ரயில், வாகன நிறுத்தம் மற்றும் கடைகளில் பணம் செலுத்துதல் என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் இன்று திருச்சி பயணம்*
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று (9ம் தேதி) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் விவரங்களை கண்டறிய இணையதள வசதி*
கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின் முந்தைய வாக்காளர் விவரங்களை கண்டறியும் வகையில் இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
https://www.elections.tn.gov.in/ ல் தெரிந்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *ஊடகவியல் துறையில் பயிற்சி பட்டறை*
இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் ஒரு வார உண்டு உறைவிட பயிற்சி பட்டறையை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் நவம்பர் 10 (நாளை) முதல் 18 வரையில் 9 நாட்கள் நடைபெறுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி*
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு*
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 18வது நம்பர் கேட்டு அருகே பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பேனாமுள் Karthick
✍️ *4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்*
எர்ணாகுளம்-பெங்களூரு உட்பட 4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் சிறப்பு திருத்தம்: முதல்வர் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்*
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 9-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடை பெறுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *4வது காசி தமிழ் சங்கமம்*
தமிழகம் - வாரணாசி இடையே கலாசார மற்றும் கல்வி பகிர்வு திட்டமான காசி தமிழ் சங்கமத்தின் 4 வது நிகழ்வு, டிசம்பர் 2ல் துவங்கி 15 வரை நடக்க உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினம்*
புதிய நடைமுறையின்படி உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டோரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்*
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *46 டன் பழைய பொருட்கள் சேகரித்து அகற்றம் : சென்னை மாநகராட்சி*
நேற்று 131 நபர்களிடமிருந்து 45.98 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று எரியூட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பதிவு அலுவலர்களின் உதவி மைய எண்கள் வெளியீடு*
ஆர்.கே.நகர் ஏ.ராஜ்குமார் 94451 90204; 80721 55700 பெரம்பூர் கே.புனிதவதி 94451 90204; 80159 59489 கொளத்துார் ஜி.சொக்கலிங்கம் 94451 90206; 78128 11462 வில்லிவாக்கம் ஜெ.சுமதி 94451 90208; 78459 60946 திரு.வி.க.நகர் ஏ.கவிதா 94451 90206; 97917 55291 எழும்பூர் இ.முருகானந்தம் 94451 90205; 99416 34048 ராயபுரம் சி.விஜய் பாபு 94451 90205; 78670 70540 துறைமுகம் கே.எஸ்.ஏ.முகமது சாகிர் உசைன் 94451 90205; 87783 81704 சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பானுகுமார் 94451 90209; 98847 59592 ஆயிரம் விளக்கு ரவிச்சந்திரன் 94451 90209; 96261 50261 அண்ணாநகர் பி.கிருஷ்ணமூர்த்தி 94451 90208; 86809 73846 விருகம்பாக்கம் எஸ்.வெங்கடேஷ் 94451 90210; 73582 75141 சைதாப்பேட்டை வி.ரகுகுமார் 94451 90213; 73580 32562 தி.நகர் ஆர்.ரங்கராஜ் 94451 90210; 74185 56441 மயிலாப்பூர் ஆர்.எம்.இப்ராஹிம் 94451 90209; 97898 95378 வேளச்சேரி எஸ்.செந்தில்குமரன் 94451 90213; 94999 32846 மதுரவாயல் எம்.சதீஷ்குமார் 94451 90091 அம்பத்துார் ஆர்.ஏ.பிரபாகர் 94451 90207 மாதவரம் எம்.ஏ.பெருமாள் 90035 95898 திருவொற்றியூர் டி.பத்மநாபன் 94451 90201 சோழிங்கநல்லுார் எஸ்.சுரேஷ்குமார் 94451 90214; 94451 90215 ஆலந்துார் சோ.முருகதாஸ் 94451 90212
பேனாமுள் Karthick
✍️ *சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044 25619523 மற்றும் 1950*
*திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி மைய எண் 7305158550*
*செங்கல்பட்டு மாவட்ட உதவி மையம் எண் 044-295417115*
*காஞ்சிபுரம் மாவட்டம் உதவி மைய எண் 044-27237107*
பேனாமுள் Karthick
✍️ *15 வயது சிறுமி சிலம்ப போட்டியில் சாதனை*
சென்னை கொளத்தூரை சேர்ந்த காளிதாஸ் தாரகேஸ்வரி தம்பதி இவர்களின் மகள் ஹரிதாஸ்ரீ 15 சூரப்பேடு வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் இதுவரை தேசிய அளவிலான போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் 8 தங்கம் உட்பட மொத்தம் 27 பதக்கங்களை வென்று உள்ளார். மேலும் 600 மணி நேரம் 25 நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
இது போல் மொத்தம் 7 உலக சாதனைகளை தனி நபராக படைத்து உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *உலகக் கோப்பை செஸ்: குகேஷ் தோல்வி*
ஆட்டத்தில் 0.5-1.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷ் தோற்று வெளியேறினார். இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் தூய்மை பணியாளர் குறைதீர் கூட்டம்*
தூய்மை பணியாளர்கள் குறைதீர் நாள் கூட்டம் வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 12:00 மணி முதல் 1 மணி வரை ஆட்சியாளர் தலைமையில் கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ரயிலில் அடிபட்டு மாணவர் பலி*
இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகே நேற்று மதியம் இளைஞர் ஒருவர் விரைவு ரயில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாக தகவல் கிடைத்தது ஆவடி ரயில்வே போலீஸ் வருகின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி*
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தாட்கோ சார்பில் ஆவடி மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் சங்க உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு தொழில் முனைவு மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சி வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பேனாமுள் Karthick
✍️ *காவலர் பணி பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு*
2ஆம் நிலை காவலர் பணி 3,665 பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
ஆவடி காவல் கமிஷனரகத்தில் பெருமாள் பட்டு இந்துக்கல்லூரி, ஆவடி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் நடக்கும் இந்த காவலர் தேர்வில் 1703 ஆண்கள் மற்றும் 415 பெண்கள் என மொத்தம் 2118 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*