தேதி
7/11/2025
*உயிர்பலி வாங்க காத்திருக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-7,அம்பத்தூர் எஸ்டேட்,சிட்கோ,அய்மா விற்கு உட்பட்டிருக்கும் ஆம்பிட் ரோட்டில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டி அந்த வழியாக செல்லும் மக்களின் வேண்டுகோள்*
சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல்-7, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அய்மா விற்கு உட்பட்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையம் மற்றும் ஆம்பிட் கம்பேனி அருகில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது இரவில் வாகனத்தில் செல்பவர்கள் அந்த பள்ளம் தெரியாததால் வாகனவிபத்து ஏற்படுகிறது
இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ஒருவர் பள்ளம் தெரியாததால் இருசக்கர வண்டியில் வந்த அந்த நபர்
பள்ளத்தில் விழுந்து கை உடைந்து கீழே விழுந்தார் அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து அந்த இடத்தில் இதே போன்று விபத்து நடைபெறுகிறது
சிட்கோ,அய்மா விற்கு உட்பட்ட இடம் என்பதால் உடனடியாக இந்த ரோட்டில் உள்ள பள்ளத்தை யாரும் சரிசெய்வது இல்லை எந்த அதிகாரிகளிடம் தகவல் கூறினாலும் இந்த இடம் எங்களுக்கு உட்பட்ட பகுதி கிடையாது என்று கூறுகிறார்கள் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி வழியாக வாகனத்தில் செல்லும் மக்களின் பணிவான வேண்டுகோள்.
செய்தி