பதிவு
25/11/2025
*ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார அதிகாரிகள் பார்வைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை*
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு, 48 வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் 5 நாட்களாக குப்பை வண்டிகள் வராமல் அப்பகுதியில் குப்பை எடுக்காமலும் இருந்து வருவதால் துர்நாற்றம் வீசி நோய்கள் வரும் அவல நிலையில் உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள் அதேபோல் ஆவடி,பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி கிரீன் சிட்டி பகுதி நுழைவாயிலில் மழை பெய்தால் மழை நீர் ரோட்டில் தேங்கி தண்ணீர் வெளியேற இடம் இல்லாததால் தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உருவாகி டெங்கு,மலேரியா டைப்பாய்ட்,காலரா போன்ற விஷக் காய்ச்சல் பரவி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட உயர் சுகாதாரதுறை அதிகாரிகள் இந்த இடத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற வழி செய்வதோடு கொசு ஒலிப்பான் மற்றும் புகைவண்டி போன்றவர்களை அனுப்பி கொசுக்களின் கூடாரமாக இருந்து வரும் அப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்களின் பணிவான வேண்டுகோள்.
செய்தி