தேதி
16/12/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *550*
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
பேனாமுள் Karthick
✍️ *டிச-16*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26027.30*
*பேங்க் நிப்டி : 59461.80*
*சென்செக்ஸ் : 85213.36*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 13534*
*22 Kதங்கம்/ g. : ₹ 12410*
*வெள்ளி /g : ₹ 215.00*
பேனாமுள் Karthick
✍️ *அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு*
டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் 14.4 லட்சம் பேர் எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவில்லை*
மொத்த உள்ள 40 லட்சம் வாக்காளர்களில் 25.6 லட்சம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 14.4 லட்சம் போ் எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூா்த்தி செய்து வழங்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthic
✍️ *தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்*
நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கும்போது அதனை தெளிவாகவும், பெரிய எழுத்துகளிலும் எழுத வேண்டும் என்று மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வேலூர் ஸ்ரீபுரத்திற்கு ஜனாதிபதி நாளை வருகை*
ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பதியில் இருந்து நாளை (17ம் தேதி) காலை 11.05 மணிக்கு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுக்கு வருகிறார். அங்கு கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *மார்ச் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு*
மார்ச் மாதத்திற்கு வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
பக்தர்கள் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் மற்றும் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் பெற தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பிரதமர் மோடிக்கு ஜோர்டானில் உற்சாக வரவேற்பு*
ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடியை அம்மான் நகர் ஏர்போர்ட்டிற்கு நேரடியாக சென்று ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்பு அளித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *அதிமுகவில் விருப்பமனு வினியோகம் தொடக்கம்*
அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனுக்கள் விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம்*
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தலைமை தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயல் பதவியேற்பு*
இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல் நேற்று பதிவேற்றார்.
பேனாமுள் Karthick
✍️ *என்.எம்.எம்.எஸ் தேர்வு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்*
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான என்.எம்.எம்.எஸ் தேர்வுக்கு டிசம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு ஜனவரி 10ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிந்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *அஞ்சல் குறை தீர் முகாம்*
சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் குறை தீர் முகாம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மாதாந்திர பயண அட்டைகளுக்கு சலுகை*
சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர பயண அட்டைகளை பெற்றால் அட்டை ஒன்றுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாதவருக்கு அபராதம்*
சென்னை மாநகராட்சியில் செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெறாத 5 பேருக்கு கால்நடை பிரிவு சிறப்பு குழுவினர் நேற்று அபராதம் விதித்தனர்.
முதல் நாளான நேற்று திருவிக நகர் மண்டலத்தில் வளர்ப்பு நாய் உரிமையாளருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. அண்ணா நகர் மண்டலத்தில் 5 வளர்ப்பு நாய்களின் உரிமைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *பொறுப்பு டிஜிபி உத்தரவு*
தமிழகம் முழுவதும் ஆர்டர்லி யாக போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வரும் காவலர்கள் உடனடியாக அவரவருக்கென பணியமர்த்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு திரும்ப வேண்டும் என பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *டாஸ்மாக் பணியாளர்கள் இன்று காத்திருப்பு போராட்டம்*
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் சென்னையில் இன்று தலைமைச் செயலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்*
காய்ச்சலுக்குப் பின் 8 வாரம் வரை வறட்டு இருமல் நீடித்தால் இருமலின் போது ரத்தம் வந்தால் டாக்டரின் சிகிச்சை பெறுவது அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ரேடியோ கிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்*
தமிழ்நாடு மாநில மருத்துவர் சார்நிலை பணியின் கீழ் வரும் ரேடியோகிராபர் பணிக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளம் ஜனவரி 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *கிளாட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு*
தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *அஷ்டலட்சுமி கோவில்: நாளை திருக்கல்யாணம்*
பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில் நாளை நடக்கும் சத கலச திருமஞ்சனம் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்குமாறு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *விஜய் பிரச்சார கூட்டத்திற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி*
ஈரோட்டில் நாளை மறுநாள் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு தனியாக இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பாடி போத்தீஸ் ல் ஜவுளி நகைகளுக்கு சலுகைகள் அறிவிப்பு*
திறப்பு விழா சலுகையாக வருகிற 21ஆம் தேதி வரை வாங்கும் அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 10சதவீதமும் 31ஆம் தேதி வரை வாங்கும் தங்க நகைகளுக்கு பவுனுக்கு ரூ.2000 வைர நகைகளுக்கு ஒரு கேரட்டுக்கு ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு*
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வருகிற 30 ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவேற்காட்டில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு*
திருவேற்காடு சிவன் கோவில் சாலை அன்னை அபிராமி நகர் எதிரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கடை அமைய உள்ள இடத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி
*பேனாமுள் பாடி பா. கார்த்திக்*