பதிவு
2/12/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *536*
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
பேனாமுள் Karthick
✍️ *டிச-02*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26175.75*
*பேங்க் நிப்டி : 59681.35*
*சென்செக்ஸ் : 85641.90*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 13043*
*22 Kதங்கம்/ g. : ₹ 11960*
*வெள்ளி /g : ₹ 196.00*
பேனாமுள் Karthick
✍️ *சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை*
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகர்ந்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்*
மகா தீபம் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்*
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
பேனாமுள் Karthick
✍️ *ரீ-ரிலீஸாகும் ரஜினியின் எஜமான் படம்*
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடித்த எஜமான் படம் வரும் 12ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
பேனாமுள் Karthick
✍️ *கார்த்திகை தீபம் செயலி அறிமுகம்*
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரத்தியேக கார்த்திகை தீபம் செயலி நிறுவப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *திருச்சி-தாம்பரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு*
திருச்சி-தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருப்பதி உண்டியல் காணிக்கை*
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.47 கோடி வசூல் ஆனதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *எலி காய்ச்சலை தடுக்க அறிவுரை*
சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீரில் எலி காய்ச்சல் மற்றும் மிலியாய்டோஸிஸ் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மழை நீரில் வெறும் கால்களில் நடக்க வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும் துணை முதல்வர் உத்தரவு*
மழைநீர் தேங்கியிருக்கும் அனைத்து பகுதிகளிலும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேகரிப்பு குளங்கள் சுற்றுச்சூழல் பூங்காவுக்கு அனுமதி*
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேகரிப்பு குளங்கள் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை அரசு தொடர அனுமதி அளித்து மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு நடவடிக்கை*
புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ரயில் என்ஜின் டிரைவர்கள் இன்று உண்ணாவிரதம் அறிவிப்பு*
8 மணி நேர பணி 46 மணி நேரத்துடன் கூடிய வார விடுமுறை. 2 நாட்கள் மட்டும் தொடர் இரவு பணி
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் எஞ்சின் டிரைவர் நல சங்கம் 2 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நடிகை சமந்தா 2 வது திருமணம்*
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ்நீமிரு வை 2 வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கோவையில் நடந்தது.
பேனாமுள் Karthick
✍️ *பிப்ரவரி 21ல் வேட்பாளர்கள் அறிமுகம் சீமான் அறிவிப்பு*
நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சியில் வரும் பிப்ரவரி 21 இல் நடைபெறும் மக்களின் மாநாடு 2026 இல் 234 பேரவை தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கல்*
டிச.2. 3 ஆகிய நாள்களில் ரேஷன் பொருள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்நிலையில் புயல் மற்றும் தொடர்மழை காரணமாக டிசம்பர் 6, 7 நாளில் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *97 லட்சம் நில ஆவணங்கள் திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்*
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் பயனாளிகள் 9 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.45 லட்சம் மானியத்தில் ரூ. 97.50லட்சம் நில ஆவணங்களை ஆட்சியர் மு. பிரதாப் நேற்று வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் வென்ற 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி அருகே முதியவர் தவறிவிட்ட பணத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்த வாலிபர்*
ஆவடி அடுத்த பாண்டீஸ்வரன் தோட்டக்கார தெருவை சேர்ந்த சரவணன் நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டு வாசலில் துணிப்பை ஒன்று இருப்பதாக அதனை எடுத்து பார்த்த போது அதில் 45,500 பணம் மற்றும் ஒரு பில் இருந்ததாக கூறி அந்த பணத்தை முத்தா புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தி தவறவிட்ட நபரிடம் உரிய பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த சரவணனுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.
பேனாமுள் Karthick
✍️ *காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு புதிய கட்டிடம்: ஆணையர் சங்கர் திறந்து வைத்தார்*
காவலர் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற புதிய கட்டிடத்தை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேற்று திறந்து வைத்தார்.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் கல்வி விளையாட்டு மற்றும் இலக்கியப் படைப்புகள் உள்ளிட்டவற்றில் தங்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்ளவும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆணையர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆவடி டிஎஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*